கி.வீரமணி 75 இருந்தால் போதும் என்றுதான் சொல்லுகிறேன். அதற்குத் தகுந்த கொள்கைகள் எந்த மதமானாலும் சரி, அது மதம் அல்லாவிட்டாலும் சரி என்றுதான் சொல்லுகிறேன்" என்றார். கேட்டவர்: இருக்கின்றதை ஒழிப்பதானால், மற்றொன்றைக் காட்ட வேண்டாமா?" என்றார். ஈ.வெ.ரா: வீட்டிற்குள் அசிங்கம் இருக்கின்றது. நாற்றம் அடிக்கிறது; எடுத்து எறியுங்கள் என்றால், அதற்குப் பதில் அந்த இடத்தில் என்ன வைக்கின்றது என்று கேட்பது சரியாகுமா?" என்றார். இப்படியாக பிரச்சாரம் மூலமும், தர்க்க வாதங்கள் மூலமும் மக்கள் மத்தியில் தந்தை பெரியார் ஏற்படுத்திய பகுத்தறிவுப் புரட்சி, பண்பாட்டு மறுமலர்ச்சி என்பது சாதாரணமானதல்ல! i பிரச்சாரத்தின் மூலமாகத்தானே மூடநம்பிக்கைகளையும் புராணங்களையும், F இதிகாசங்களையும் கற்பனைக் கடவுள்களையும் மக்கள் நம்பும்படியாகச் செய்தனர். அதே பிரச்சாரத்தைப் பகுத்தறிவு முறையில் பயன்படுத்தி, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி மூடநம்பிக்கைகளின் வேர்களை வீழ்த்தினார் தந்தை பெரியார். தந்தை பெரியாரின் இந்த அணுகுமுறைக்கு மகத்தான வெற்றி கிட்டியதை யார்தான் மறுக்க முடியும்? தமிழ்நாட்டுக்கு 1977 செப்டம்பரில் வருகை தந்த பிரபல சோசலிஸ்டும், பொருளாதார நிபுணரும், ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களின் உற்ற தோழருமான அசோக் மேத்தா அவர்கள் கூறிய ஒரு தகவல், கருத்து தமிழ்நாட்டில் தந்தை பெரியாரின் இயக்கம் ஏற்படுத்திய தாக்கத்திற்கான அத்தாட்சியாகும்.. "தென்னகத்தில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே பிற்படுத்தப்பட்ட மக்களின்மீது உயர் ஜாதிக்காரர்கள் செலுத்திய ஆதிக்கத்தை எதிர்த்து
பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/82
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை