பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 இதன் தமிழாக்கம்: பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி "பெரியார் என்று மக்களுக்கு அறிமுகமாயுள்ள ஈ.வெ. ராமசாமி நாயக்கர் அவர்கள் ஒரு தீவிரமான சீர்திருத்தவாதியாவார்! தமிழ்நாட்டின் சமூக அமைப்பு எனும் நிலப்படத்தை, அசைக்க முடியாத தனது உறுதியாலும், வேறு எங்கும் எளிதில் காணமுடியாத கடும் உழைப்பாலும் இந்து சனாதனத்தை எதிர்த்துப் போரிட்ட அந்த மாபெரும் மனிதரான பெரியார் அவர்களை, வெறும் பார்ப்பன எதிர்ப்பாளராகவும், கடவுள் மறுப்பாளராகவும் மட்டும் படம் பிடித்துக் காட்டுவது அவரின் பெருமைக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்! விடுதலைப் போராட்டத்தில் மிகத் தீவிரமாகப் பங்கு கொண்டவர் அவர்; ஒத்துழையாமை இயக்கத்தில் கடுமையாக உழைத்தவர்.காந்தியாருடன் சத்தியாகிரகங்களில் ஈடுபட்டு, காதி என்ற கதரைப் பரப்புதல் போன்ற பல அரிய தொண்டுகளை அவர் செய்தவர் என்பது நம் மக்களுக்கு அதிகம் தெரியாத ஒன்றாகும்." "பெரியார் அவர்களது பகுத்தறிவுப் பிரச்சாரம், சீர்திருத்தக் கொள்கைகளும் எப்படி சமூக அடித்தளத்தில் அவதிப்பட்ட கடைக்கோடி மக்களைச் சுண்டி இழுத்தது என்பதை ஒருவர் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அம் மக்களை வாட்டிய சாதிக் கொடுமைகளையும், அவற்றை நிலைநிறுத்த பயன்பட்ட சடங்கு சம்பிரதாயங்களையும் முதலில் சரியாய்ப் புரிந்துகொள்ள முனையவேண்டும். காந்தியாரின் அணுகுமுறையால் ஏற்பட்ட கருத்து மாறுபாட்டால் அவர் காங்கிரசை விட்டு வெளியேறினார்; காலங்காலமாய்த் தம் மண்ணில் நிலவிய பார்ப்பனப் பண்பாட்டிற்கு மாற்றாக ஒரு திராவிடப் பண்பாட்டை லளர்க்கும் இயக்கம் கண்டார் அவர்!