கி.வீரமணி 79 சிலைகளை உடைத்தவர், கடவுள் மறுப்பு ஊர்வலங்களை நடத்தியவர் என்று அவர் கையாண்ட முறைகளுக்காகப் பெரியாரை பலர் கடுமையாக விமர்சித்தனர்; அவைகள் பார்ப்பனீயத்தின் சின்னங்களாகவும் மூட நம்பிக்கைகளாகவும் காட்சி அளித்த காரணத்தால்தான் அவைகளை கடுமையாக எதிர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்று அவர் தமது நிலையை உறுதிப்படுத்திப் பதிலை அளித்தார்." ஆயிரம் ஆண்டில் வரலாற்றை உருவாக்கியவர்கள் Makers of the Millennium "வேதங்களில் பார்ப்பனர்களுக்கு மிகப் பெரும் சலுகைகள் அளிக்கப் பெற்றுள்ளன; எது நாள் வரை அந்தச் சலுகைகளுக்கு அறைகூவல் (சவால்) விடப்படவில்லையோ அதுவரை மட்டுமே அவை புனிதமானவையாக இருந்தன. இந்த அறைகூவல் தமிழ்தேசத்தில் புயலென எழுந்தது. கடவுள் சிலைகளை உடைத்த ஒருவர் அதைத் தொடங்கினார்.அவர் வேதங்களை மட்டுமின்றிக் கடவுளர்களைப்பற்றியும் கேள்விகளை எழுப்பினார். சில பிரச்சினைகளில் தீவிரம் போல் தோன்றும் நிலைகளை எடுத்தார், ஆனால் அவர் செய்த சமூகப் புரட்சியின் அடிப்படையான இயல்பை, அந்தப் புரட்சியால் பாதிக்கப்பட்டவர்கள் கூடத் தெளிவாகக் கண்டனர். தமிழ் நாட்டின் அரசியல்காட்சியும், அத்துடன் இந்தியாவின் பெருமளவு அரசியல் காட்சியும், இறுதி வடிவைப் பெற்றுவிட்டதாகத் தோன்றும் வகையில் இராமசாமி நாய்க்கரால் (1879-1973) மாற்றப்பட்டது." இந்தியா 1000 முதல் 2000 From "India 1000 to 2000, " Express Publications The enormous privileges given to Brahmins by the Vedas were sacrosanct only as long as they went unchallenged. The
பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/86
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை