கி.வீரமணி 89 விருப்பமேயொழிய, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் பற்றிய அக்கறை கிடையாது." - (தந்தை பெரியார், 11.12.1944 அன்று ஈரோடு மாநாட்டில் ஆற்றிய உரை ) தந்தை பெரியாரின் பண்பாட்டுப் புரட்சியில் பூத்துக் கனிந்தவரான அறிஞர் அண்ணாவின் கூற்றை நினைவு படுத்தி எனது உரையை நிறைவு செய்ய விரும்புகிறேன். "இப்படி ஒரு சமூகத்தை, நாட்டு மக்களை ஆளாக்கி விட்ட பெருமை உலகத்தில் ப்ல தலைவர்களுக்குக் கிடைத்ததில்லை; நம்முடைய தமிழகத்தில் பெரியார் அவர்களுக்குத் தான் அந்தத் தனிப்பெருமை சேர்ந்திருக்கிறது; அந்தப் பெருமைக்குரியவர்களாக நாம் நம்மை ஆக்கிக்கொள்ள வேண்டும். அவர் அளித்துள்ள செல்வம் அவர் நமக்குக் காட்டியுள்ள லட்சியப் பாதையில் நடந்து செல்லுவதற்கேற்ற ஆற்றல் நமக்கு வரவேண்டுமென்று, அவர் இன்றையதினம் நமக்கெல்லாம் வாழ்த்துச் சொல்லவேண்டும். அந்த வாழ்த்து நமக்குப் புதிய வல்லமையை - புதிய உற்சாகத்தைத் தரும் என்பதில் அய்யமில்லை." "தந்தை பெரியார் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட அறிவுப் புரட்சி சுலபத்தில் நிற்கப் போவதில்லை. அது போகவேண்டிய தூரத்துக்குப் போய் அடைய வேண்டிய சக்தியை, இலக்கைத் தொட்டுத்தான் நிற்கும்." - அறிஞர் அண்ணா.
பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/96
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை