பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

பெரியாரும்‌ சமதர்மமும்‌

1917இல் இரஷ்யாவில் எழுத்தறிவு எவ்வளவு? நூற்றுக்கு இருபத்தைந்து பேர்களுக்கே உண்டு. அது 1920இல் 44.4 விழுக்காடாயிற்று. 1926இல் 52.8 விழுக்காடாயிற்று. அடுத்த அய்ந்தாண்டுகளில் மேலும் தாவிற்று. 1931இல் நூற்றுக்கு 78.6 பேர்கள் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். இதன் பொருள் என்ன? பள்ளி வயதை அடையாத குழந்தைகளும், அய்ம்பது வயதைத் தாண்டி விட்டவர்களுமே, தற்குறிகளாக இருந்தார்கள். எவ்வளவு விரைவான வளர்ச்சி?

அதே போன்று, பெரும்பாலோருக்கு வேலை இல்லை என்ற நிலையும் விரைந்து ஒழிந்தது. 1935க்குள் வேலை செய்யும் வயதில் இருந்த அனைவருக்கும், வேலை கொடுத்து விட்டார்கள்.

அது மட்டுமா? விபசாரம் ஒழிக்கப்பட்டு விட்டது, எவரையும், எவரும் பணம் கொடுத்து வாங்க, துய்க்க முடியாது. ஆண், பெண் சமத்துவம் நடை முறையாகி விட்டது.

இருநூறு ஆண்டுகளிலும், தனியுடைமை நாடுகள் எட்ட முடியாத நிலையை, அந்தச் சமதர்ம நாடு இருபது ஆண்டுகளில் அடைந்து விட்டதைக் கண்ட அறிவாளிகள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் அம்முறையிடம் ஆழ்ந்த அக்கறை காட்டினார்கள்.

கல்லூரி மாணவர்களிடையிலும், அரசு ஊழியர்களிடையிலும், அரசியல் கட்சியாளர்களிடையிலும், எழுத்தாளர்களிடையிலும், முற்போக்குச் சிந்தனையாளர்கள், சமதர்மவாதிகளாகவே இருந்தார்கள். இத்தென்றல் செல்வந்தர்களிடையிலும் வீசிற்று.

அன்று, சோவியத் நாட்டில் மட்டும் நடைபெற்ற சமதர்ம வாழ்க்கை முறை, விரைவில் உலகளாவிய வாழ்க்கை முறையாக மாறி விடும் என்று பல செல்வந்தர்கள் கூடக் கருதினார்கள். தடுக்க முடியாத அம்முறை—புதிய நாகரிகத்தை ஏற்றுக் கொண்டு, அதைப் பரப்புவதே காலமறிந்த அறிவுடைய செயல் என்று எண்ணினார்கள். தொடக்கக் காலத் தியாகங்கள், பொது உடைமை ஆதரவாளர்களைத் தடுத்து நிறுத்த முடியாது என்ற கருத்தினை வளர்த்தது.

தியாகத் தீயில் புடம் போட்ட சக்திகளைப் போட்டி போடும் சக்திகளாக, தேர்தல் கானல் நீரைத் தேடியோடும் சக்திகளாக