114
பெரியாரும் சமதர்மமும்
புக்குப் போக முடியாது என்பதே அவருடைய திட்டம். ஓராண்டு தவறியவனை, அடுத்த ஆண்டு படிக்க விடுவது அக்காலத்தில் அருமை. ஏதோ சில உயர்நிலைப் பள்ளிகளில் மட்டுமே இரண்டாம் ஆண்டும் படித்துப் பார்க்க விடுவார்கள்.
கட்டாய இந்தித் திட்டத்தின் உள்ளுறை என்ன?
நாட்டுப்புறங்களிலிருந்து, ஆறாம் வகுப்பிற்கு வந்து சேரும் பதினாயிரக்கணக்கான மாணவர்கள் ஒரே நேரத்தில் புதிதாக இரு மொழிகளை—ஆங்கிலத்தையும், இந்தியையும் படிக்க வேண்டும். இரண்டிலும் தேர்ச்சி பெற வேண்டும்.
இல்லா விட்டால், மாடு மேய்க்க, விறகு பொறுக்க, துணி வெளுக்க, மூட்டை தூக்கப் போக வேண்டும்.
தப்பித் தவறி, சிலர் இந்தியிலும் தேர்ச்சி பெற்றால், ஒன்பதாவதில் தொடர்ந்து படிக்க வாய்ப்பு கிடையாது; ஒன்பதாவதிலோ, பத்திலோ, பதினொன்றிலோ விருப்பப் பாடமாகப் படிக்கவும் இடம் இல்லை. அந்நிலையில் இந்தி அறிவு எவ்வளவு காலத்திற்குப் பசுமையாக இருந்து, ஓருமைப்பாட்டை வளர்க்கவோ, வேலை வாங்கவோ பயன்படுமென்பதைச் சிந்தியுங்கள்.