இந்தி எதிர்ப்பு முதன்மை பெற்றது
117
கட்டாய இந்திப் பாடம் கட்சித் திட்டம் அல்லவாயினும், கட்சியின் ஆட்சி அப்படியொரு முடிவை அறிவித்த பிறகு, அதை எப்படியும் ஆதரித்தாக வேண்டும் என்ற நிலையில் காங்கிரசு கட்சியினர் இருந்தனர்.
ஒரு வலிமை மிக்க கட்சியின், ஆட்சியைப் பிடித்துள்ள பெருங்கட்சியின், தீங்கான முடிவை முறியடிக்க பெரும் போராட்டம் தேவை என்பது பலருக்கும் புரிந்தது. அப்போராட்டத்தில் சிறை செல்லல் போன்ற தொல்லைகளைச் சமாளிக்க நேரிடலாமென்பதும் தெளிவாயிற்று. காங்கிரசைப் போன்ற கட்டுப்பாடான இயக்கம் ஒன்றே, கட்டாய இந்திப் பாடத்தைத் தடுத்து நிறுத்த இயலும் என்பதும் வெட்ட வெளிச்சமாயிற்று.
தமிழ் நாட்டின் நன்மைக்கும், தமிழர் உரிமைக்கும் தந்தை பெரியாரும், அவரது தன்மான இயக்கமும் போராடும் அளவிற்கு, வேறெந்த தலைவரோ, இயக்கமோ போராட முடியாது என்பது நாடறிந்த உண்மை. இராசகோபாலாச்சாரியாருக்கு ஈடு கொடுத்துப் போராடக் கூடியவர், பெரியாரைத் தவிர எவரும் இல்லை. பெரியாரின் இயக்கம் ஈர்க்குமளவு, பிற இயக்கங்கள் போராட்டத் தொண்டர்களை ஈர்க்க இயலாது என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.
கண்டன மாநாடுகள், பொதுக் கூட்டங்கள் முதலியவற்றின் உணர்வுகளை, அன்றைய ஆட்சி பொருட்படுத்தவே இல்லை. போராட்டம் ஒன்றே, கட்டாய இந்திப் படிப்பைத் தடுக்கும் என்பது பொது முடிவு. அப்போராட்டத்தை முன்னின்று நடத்த வேறு எவரும், எந்த அமைப்பும் போதிய வலிவோடு முன் வராமையால், தந்தை பெரியார் அப்பொறுப்பினை ஏற்றார். கட்டாய இந்தி எதிர்ப்பு, தன்மான இயக்கத்தின் உடனடிப் பணியாகி விட்டது.
போதிய அறிவிப்பு கொடுத்து விட்டு, சென்னை, தங்க சாலை தெருவில் உள்ள இந்து தியலாஜிகல் உயர்நிலைப் பள்ளியின் முன்பு, நாள் தோறும் அடையாள மறியல் செய்வது, கட்டாய இந்தி எதிர்ப்பு முறையாக, முடிவு செய்யப்பட்டது.
இதில் ஒன்றைச் சிறப்பாகக் கவனிக்க வேண்டும். அது என்ன? குறிப்பிட்ட நாளில், தமிழ்நாடு முழுவதும் கிளர்ச்சி என்று திட்டமிடவில்லை. பெரியாரின் எல்லாக் கிளர்ச்சிகளுமே, வன்முறைக்கு