132
பெரியாரும் சமதர்மமும்
கிறித்துவர்களும், கிறித்துவின் சிலைக்கோ, கன்னிமேரி சிலைக்கோ, பல வகை முழுக்குகள் போடுவதை வழிபாட்டு முறையாகக் கொள்வதில்லை.
மற்றவர்களால், பொருள்களைப் பாழாக்காது வழிபட முடிகையில், இந்துக்களுக்கு மட்டும் அதிகப் பொருட்களைப் பாழாக்குவதே அதிக பக்தியாக, இறை நம்பிக்கையின் வெளிப்படாக இருப்பானேன்? அவற்றை விட்டு விட்டு வழிபடும் பட்டதாரி கூட இல்லையே!
பிற சமயங்களில், தன்னலம், சுரண்டல், ஆதிக்கம் ஆகிய ஒட்டடைகள் கால ஓட்டத்தில் சேர்ந்து போயிருக்கலாம்.
இந்து சமயத்தின் ஊற்றுக்கால்களே நச்சானவை. அவை சிறு கூட்டம், பெருங்கூட்டத்தை அடிமைப்படுத்தி, இழிவு படுத்தி மிதித்து வைக்கும்—பிறவி முதவாளித்துவத்தின் சுரப்புகள் ஆகும். அவற்றின் துணையால், பாட்டாளிகளை, உழவர்களைச் சுரண்டிக் கொண்டு, அவர்கள் வறுமையிலிருந்து விடுபட முடியாமல் அவர்களை அழுத்தி வைக்கவே, இந்து சமய முறைகள் தோன்றின; பயன்படுகின்றன.
வணங்குகின்றவனுக்கும், வணங்கப்படுவதுக்கும் இடையில், தரகனாவது வடமொழியாவது இருக்கக் கூடாதென்றும், வழிபாட்டிற்காகக் காசு, பணம் செலவழிக்கக் கூடாதென்றுந்தானே 1929இல் முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டிலும், 1930இல் இரண்டாவது மாகாண சுயமரியாதை மாநாட்டிலும் முடிவு செய்தார்கள். அதைக் கூடச் செய்ய முன் வராத, நாணல்களாக அல்லவா தமிழர்கள் வாழ்ந்தார்கள்?
எப்போதோ, பல நூற்றாண்டுகளுக்கு இழந்த உரிமையைக் கடைசியாக வந்தவனிடம் கேட்டது தவறல்ல; கொடுமையல்ல.
அன்றைய அரசியல் உலகில், சென்னை மாகாணத்தை விடச் சிறிய நாடுகள் பல, குறைந்த மக்கள் எண்ணிக்கையுடைய நாடுகள் பல, முன்னர் சிக்கி இருந்த பெரிய ஆட்சிகளிலிருந்து விடுபட்டு, தன்னாட்சி பெற்ற நாடுகளாக இயங்கி வந்தன.
இன்று செய்திகளில் அதிகம் அடிபடும் போலந்து முதல் அமைதியான நேபாளம் வரை, அன்றே ஆட்சி உரிமை உடைய தனி நாடுகள். இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு, அவற்றை விடச் சிறு நாடுகள் கூடத் தன்னாட்சி பெற்று விட்டன.