146
பெரியாரும் சமதர்மமும்
நடவடிக்கைகளில் ஈடுபட்டு, எதிர்ப்பட்ட ஊரார் பகைக்கும், தூற்றலுக்கும் ஈடு கொடுத்து வந்த சமத்துவ வாதிகள், சமதர்மமே எல்லோரையும் வாழ்விக்கும் என்று புரிந்து கொண்டு, அக்கொள்கையைப் பரப்பி, நிலமுடையோர், பணமுடையோர், போன்றவர்களின் பகையைத் தேடிக் கொண்ட, முற்போக்குச் சிந்தனையாளர் தாங்கள் பட்ட பாட்டினை நொடியில் பாழாக்கி விட்டார்கள்.
சூடேறிய விளக்குக் கூட்டின் மேல் இரு துளி தண்ணீர் பட்டால், கண்ணாடி சிதறிப் போவது போல், முற்போக்குச் சிந்தனையில் சூடேறிய காளைகள் சிதறிப் போனார்கள்.
சமத்துவத்திற்காக முன்னேறிக் கொண்டிருந்த பேரணி, ‘ஆகஸ்ட் 15, விடுதலை நாளா? கெடுதலை நாளா?’ என்ற வெட்டிப் பேச்சின் பக்கம் திரும்பி விட்டது.
சமதர்மத்திற்காகக் களம் நோக்கி நடந்த தியாகப் படை, அந்த ஒரு நாள் கூத்தைப் பற்றியே, பேசி, எழுதி, வீணாகி விட்டது.
‘அரசியல் உரிமை’ என்ற அக்கருவியைக் கொண்டு, பொருளியல் பொதுவுடைமையை வளர்க்கவும், சமுதாய ஒரு நிலையைப் பயிரிடவும், பொதுமக்களைத் திரட்ட வேண்டியவர்கள், ‘பெரியார் சொன்னது சரியா? அண்ணா சொன்னது சரியா?’ என்று வாதிட்டு ஏமாந்தார்கள்.
சென்ற முப்பத்து நான்கு ஆண்டுகளின் வரலாறு எதை மெய்ப்பித்தது?
பெரியார் கணிப்பு சரியென்பதை மெய்ப்பித்தது. சிங்காரவேலர் கூறியதைச் சரியென்று காட்டியது. வெள்ளையன் வெளியேறிய போது நடந்தது, ஆள் மாற்றம் மட்டுமே, என்பது உறுதியாயிற்று. ‘விடுதலை பெற்ற இந்தியாவில், பொதுமக்கள் நிலை, அன்னியர் ஆட்சிக் காலத்தைக் காட்டிலும் மோசமாகி விடும்’ என்று பெரியார் சொன்னது எவ்வளவு உண்மை என்று எல்லோரும் உணர்கிறார்கள்.
மதிப்பீடு சரியாக இருப்பதாலேயே, மருத்துவம் சரியாகி விடுவதில்லை. நம் மக்கள் பெரியாரின் மருந்தைப் போதிய அளவில்