இடைக்கால இந்திய அரசு
149
உதிரித் தொழிலாளர்கள் குமுறல் காதுகளில் எட்டவில்லை. வேலையற்றுத் திண்டாடும் பட்டினிப் பட்டாளமோ, குரல் எழுப்பவும் வலிவின்றி, வதைப்பட்டது.
நாட்டின் சிறுபான்மையாளர்களாகிய அமைப்புகளுக்குட்பட்ட பாட்டாளிகளின் கோரிக்கைகளே, புதிதாக ஆட்சிக்கு வந்தவர்களுக்கு எரிச்சல் ஊட்டின; தொல்லை கொடுப்பதற்காகவே எழுப்பப்படுவனவாகத் தோன்றின.
பதவிகளைப் பெறுவது அருமை; எதற்கும் பயன்படுத்த முடியாத, உப்பு சப்பு இல்லாத பதவிகளைப் பெற்று விட்டால் கூட, அவற்றை உதறி விட்டுப் போக துணிச்சல் வருவது, அதனினும் அருமை; அந்நிலையில் நண்பர்களையும், சதிகாரர்களாக நினைப்பார்கள். ஆட்சியில் உட்கார்ந்து விட்டவர்கள், தங்கள் நாற்காலிகள் ஆட்டங் காண்பதாக நினைத்து விட்டால், ஒரே மருந்தையே கையாள்வார்கள். அது என்ன மருந்து? அடக்கு முறை மருந்து.
1946இல் இந்தியாவில், இடைக்கால இந்திய ஆட்சி ஏற்பட்டதுமே, அடக்குமுறை வெடித்தது. வழக்கம் போல, பொது அமைதிக்குக் கேடு விளையாமல் காக்கும் பொருட்டு என்ற சாக்கில், இந்திய மாநிலங்களில் அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டன. அவை பின்னர் சட்ட மன்றங்களால், சட்டமாக்கப்பட்டன.
‘அவசரச் சட்டங்கள் இன்றைய அடக்கு முறைக் கருவிகள்’ என்று ஆத்திரப்படுபவர்கள், இதை நினைவில் வைத்துக் கொள்ளட்டும். எதை? இந்தியாவின் தன்னாட்சி உரிமை ‘அவசரச் சட்டம்’ என்னும் அடக்கு முறையோடு பிறந்தது. அன்று முதல், அடுத்தடுத்து ஒவ்வோர் வேடத்தில் அடக்கு முறை அரங்கேறி ஆட்டம் போடுகிறது.
இந்தியச் சிந்தனையாளர்கள், பொதுத் தொண்டர்கள் ஒவ்வோர் முறையும், தங்களுக்குள் இருக்கும் அற்ப கருத்து வேறுபாடுகளைப் பலமடங்கு பெரிதாக்கிக் காட்டிக் கொண்டு, ஒரு பிரிவினர் மாறி, மறுபிரிவினர் அடக்குமுறைக்குத் தோள் கொடுக்கிறார்கள்.
இடைக்கால இந்திய அரசு ஏற்பட்டதும், பற்பல தொழிற்சங்கங்கள் தங்களுக்கு விடிவு காலம் வந்து விட்டதாகக் கருதிக்