பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

பெரியாரும்‌ சமதர்மமும்‌

கிண்டலுக்காக நான் இப்படிக் கூறவில்லை. திருவாரூரில் யாரோ ஒருவர் வீட்டில், மணலி கந்தசாமி ஒளிந்து கொண்டிருப்பதாக யாரோ ஒரு சோம்பேறி (துப்பறிகிற நிபுணன்) அதிகாரிகளுக்குக் கூறி விட்டான். அதிகாரிகளில் ஒருவர் மகா,மகா நிபுணர். அவர் என்ன செய்தார் தெரியுமா? இன்னொருவர் வீட்டில் போய், தடபுடல் செய்தார். இந்த வீடு, திராவிடர் கழகத் தோழர் ஒருவரின் வீடு. அவர் திடுக்கிட்டுப் போய் விட்டார். மாலை 3 மணிக்கு ரிசர்வ் படையுடன், திடீரென்று வீட்டிற்குள் நுழைந்து, பெண்டு பிள்ளைகளை எல்லாம் அலறச் செய்து, கழகத் தோழரைப் போலீஸ் வளையம் போட்டு ஒரே கலாட்டா! சந்து பொந்தெல்லாம் சோதனை! கூரையைக் கிளறிக் கீத்துக்குள்ளே கூடத் தேடினார்களாம். (ஆண்கள் வயிற்றைத்தான் ஆபரேஷன் பண்ணவில்லை.)

அதிகாரிகள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்களாம்

‘இந்த வீடுதானே, மாணிக்கம் வீடு?’ என்று கேட்டார் சலிப்படைந்த மேலதிகாரி.

‘இல்லை சார்! என் பெயர் அண்ணாமலையாச்சே!’ என்றார் கழகத் தோழர்.

தப்பான வீட்டில் சோதனை நடந்து விட்டதைக் கண்டார்கள். முகத்தில் அசடு வழிந்து, அண்டா நிறைந்ததாம். ஒரு வாரத்துக்கு முன்பு நடந்த சங்கதி இது!

“இன்ன மந்திரி வீட்டில் மணலி கந்தசாமி இருக்கிறார்” என்று சொன்னால் போதும், உடனே மந்திரி வீடும் இதே கதிதான்.

“எனக்கொரு யோசனை தோன்றுகிறது. யார் யார் கள்ள மார்க்கெட் வியாபாரத்துக்காகச் சரக்குகளைப் பதுக்கி வைத்திருக்கிறார்களோ, அந்த இடத்தைக் காட்டி, இந்த இடத்திலேதான் மணலி கந்தசாமி இருக்கிறார் என்று சொன்னால் போதும். பதுக்கல் சாமான்களெல்லாம், அம்பலத்துக்கு வந்து விடும். பூனையைத் தேடப் போய், யானை சிக்கினால் லாபந்தானே!”

தம்பி கந்தசாமி ! நீ இன்னும் என்னென்ன கூத்துக்குக் காரணமாயிருக்கப் போகிறாயோ! நீ எங்கே இருந்தாலும் சரி! பத்திரமாயிரு. உன்னால் ஆயிரம் போலீஸ்காரர்கள் சுகமாகப்