பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம்யூனிஸ்டுகள் வேட்டையாடப் பட்டனர்

161

கவிழ்ந்தது. அது ‘கம்யூனிஸ்டுகள் சதி,’ என்று அதிகார வர்க்கம் சொல்லிற்று. குத்தூசியார் பேனா தாக்கிற்று.

இப்படித்தான் செய்ய வேண்டும்’ என்ற தலைப்பில் 17-3-1950 அன்று அவர் எழுதியதை அப்படியே பார்ப்போம்.

“கல்கத்தா ரயிலைக் கவிழ்த்த கம்யூனிஸ்டுகளைப் பற்றி, பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிவதற்காக ஒரு பத்திரிகை பிரமாண்டமான ஏற்பாடு செய்திருந்தது. ஏராளமான கடிதங்கள், உண்மையாகவே வந்து குவிந்தன. கம்யூனிஸ்டுகளைக் கண்ட, கண்ட இடத்தில் சுட்டுத் தள்ள வேண்டும் என்றே எல்லாக் கடிதங்களும், கிட்டத்தட்ட ஒரே மாதி நடையில் எழுதியிருக்கின்றனர். (இந்தச் சேவைக்காக இந்தப் பத்திரிகைக்குச் சென்னை சர்க்கார் 2, 3 இலட்ச ரூபாய் கொடுத்துதவ வேண்டுமென்று சிபார்சு செய்கிறேன்) இக்கடிதங்களைக் கண்டதும், தரைக்கு மேலேயுள்ள இரண்டொரு கம்யூனிஸ்டுகளும் அன்டர் கிரவுண்ட் போயிருப்பார்கள் என்றே நினைக்கிறேன். நல்ல வேலை செய்தார் ஆசிரியர். குண்டோ, வெடிமருந்தோ செலவில்லாமல் ஆபீசிலுள்ள ஒரு பாட்டில் ‘இங்க்’ செலவிலேயே கம்யூனிஸ்டுகளை ஒழித்துக் கட்டி விட்டார். ஏழ்மையில் நெளிந்து கொண்டிருக்கும் இவருக்கும், சர்க்கார் ஏதாவது உதவி செய்யா விட்டால், நன்றி கெட்ட சர்க்கார் என்றே குற்றம் சாட்டுவேன்.

“கல்கத்தா ரயில் விபத்து சேலம் படுகொலையை மறைப்பதற்காகச் செய்யப்பட்டது என்று கம்யூனிஸ்ட் பத்திரிகைகள் குறை கூறுகின்றன. அதாவது, காங்கிரஸ்காரர்களே ஆகஸ்ட் தனம் செய்து விட்டு, அதைக் கம்யூனிஸ்டுகள் தலையில் சுமத்தி, சேலம் சிறைக் கொலைப் பழியிலிருந்து, தங்கள் சர்க்காரைத் தப்ப வைப்பதற்காகச் செய்யப்பட்ட ஏற்பாடென்றும், அப்படியில்லா விட்டால், எந்த விசாரணையும் நடப்பதற்கு முன்பே, இரயில் கவிழ்ந்த மறு நிமிஷத்திலேயே ‘இது கம்யூனிஸ்டுகளின் நாச வேலை’ என்று பொறுப்புள்ள உத்யோகஸ்தர்களும், இரண்டொரு மந்திரிகளும் அறிக்கை விட்டிருப்பார்களா என்றும் வடநாட்டு கம்யூனிஸ்ட் பத்திரிகைகள் எழுதுகின்றன.

“இது மட்டுமா?

“அந்த ரயிலில் காளா வெங்கட்ராவும் அவரைச் சேர்ந்தவர்களும் போனதால், அவருக்கு விரோதிகளாயுள்ள ஆந்திரத் தலைவர்களின் சதி வேலையாக ஏன் இருக்கக் கூடாதென்றும் எழுதுகின்றன.

—11—