பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

பெரியாரும்‌ சமதர்மமும்‌

ஆளுக்கு வேளைக்கு எவ்வளவு செலவு செய்வது? அன்றைய விலைவாசியில், மாநகராட்சி, வேளைக்கு ஒன்றரை அணா செலவு செய்தது. அதே அடிப்படையில், தனித் தனி கணக்கிட்டோம். இருவர் முடிவும் ஒன்றாக இருந்தது.

அடிப்படைகளை மறு பரிசீலனை செய்து விட்டு, திட்டத்தை, விவரமாக உருவாக்குவோம். தொடக்கப் பள்ளிகளில், பகல் உணவு திட்டத்தை நடத்துவது என்று இப்போதைக்கு முடிவு செய்வோம் என்றார்.

முதல் அமைச்சர் காமராசர், தனது உரையில் மேற்படி முடிவை அறிவித்து விட்டார். அதோடு நிற்கவில்லை.

அய்ந்து வயது முதல் பத்து வயதுக்குட்பட்ட மாணாக்கர் வயிறார உண்ண எவ்வளவு அரிசி தேவை என்பதைச் சிலரை விட்டு சோதித்தார். அப்போது அரிசி, படிக் கணக்கில்தான் விற்றது. ஒருபடி அரிசியை சமைத்தால், பத்துப் பிள்ளைகள் வயிறார உண்ண முடிந்தது.

மாநகராட்சி அந்த அளவில் அரிசி கொடுத்தது குறைவல்ல என்பதை உறுதிப் படுத்திக் கொண்டார்.

வெறும் சோறும், நீருமா கொடுக்கத் திட்டமிட்டார். இல்லை. சாம்பார் சாதம், தயிர் சாதம் போட முடிவு செய்தார். அவற்றிற்கு மேற்செலவு எவ்வளவு ஆகும் என்பதை உணவு விடுதி நடத்துவோரை அழைத்துப் பேசி தெரிந்து கொண்டார். அன்றைய விலை வாசி நிலவரத்திற்குச் சாப்பாட்டிற்கு ஒன்றரை அணா தேவை என்று முடிவு செய்யப்பட்டது.

காமராசர் ஆணைப்படி, பள்ளிப் பகல் உணவுத் திட்டத்தைத் தீட்டினேன்; இரண்டாவது அய்ந்தாண்டுத் திட்ட நகலில் சேர்த்தேன்.

திட்டத்தை ஆய்ந்த மூன்று மூத்த அய்.சி.எஸ். அலுவலர்களும் எதிர்த்தார்கள். எடுத்து விட முடிவு செய்தார்கள். நான் அடம் பிடித்தேன். நான் ஒப்பவில்வை என்பதை குறிப்பில் காட்டச் சொன்னேன். உடனே மாறி விட்டார்கள். அமைச்சர் அவை முடிவுக்கு விட்டு விடுவதாக ஒரு மனதாக முடிவு செய்தார்கள். அமைச்சர் அவையில் ஆலோசனைக்கு வந்த போது, வேறு இரு மூத்த அய்.சி.எஸ். அலுவலர்கள், அதனால் பணம்