பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்விப் புரட்சியில் காமராசரும் பெரியாரும்

187

1956 ஜூலை முதல் 1957 அக்டோபர் முடிய, ஊரார் செலவில் நடத்திக் காட்டிய பிறகே, சென்னை மாநில அரசு பகல் உணவுத் திட்டத்தைத் தனதாக்கி, பெருமை பெற்று, வளர்த்து, கற்போருக்கு அதிகமாக உதவிற்று.

1957ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாள் தொட்டு, பள்ளிக்கூட பகல் உணவுத் திட்டம், அரசின் திட்டமாயிற்று. அதாவது நடை முறைச் செலவில், நூற்றுக்கு அறுபது பங்கை அரசு மான்யமாக வழங்கிற்று.

ஆனால், சுருக்கமான காலவரை வகுத்துக் கொண்டு, அந்தக் காலத்திற்குள், எல்லாப் பள்ளிகளிலும், பகல் உணவு போட்டாக வேண்டுமென்று கெடுபிடி செய்யவில்லை.

ஊர் நன்கொடையாளர் கூடி, விதி முறைகளை முடிவு செய்து கொண்டு, அவற்றையொட்டி தலைவர், பொருளாளர் போன்ற நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, ஆய்வாளருக்கு எழுதினால், அவர் உணவு மையத்தை ஏற்றுக் கொள்வார். கிடைத்த நன்கொடைக்கு ஏற்ப, எத்தனை பேருக்கு உணவு அளிப்பது என்பதை முடிவு செய்வார்.

முதலில் சிலருக்குப் போட்டு, பின்னர் வளர்ந்து, பலருக்கும் போட்ட பள்ளிகளே ஏராளம். மாவட்டம் முழுவதற்குமாக மாணாக்கர்களை மொத்தமாகக் கணக்கிட்டு, அவர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு உணவு போடப்பட்டது. பல ஊர்களில் அந்த அளவிற்குக் கூட ஏழைகள் இல்லை. அதனால், அக்கால வரம்பு பற்றி, எந்த ஏழை மாணவனோ, மாணவியோ உணவு பெறாமல் போகவில்லை.

உள்ளூரிலேயே தொடக்கப் பள்ளி. அங்கு எல்லார்க்கும் இலவசக் கல்வி; அதோடு ஏழைகளுக்குப் பகல் உணவு ஆகியவை கல்விப் பயிரை வளர்த்தது. இருப்பினும், பெண்கள், ஆண்கள் அளவு சேரவில்லை. ஆடையில்லாக் குறையே, அதற்குக் காரணம் என்று தெரிந்தது.

முதல் அமைச்சர் காமராசரின் அனுமதியையும், ஆதரவையும், ஊக்கத்தையும் பெற்று இலவசச் சீருடை இயக்கம் தொடங்கப்பட்டது. சிறுமிகளோடு, சிறுவர்களுக்கும் இலவசச் சீருடை கொடுக்கப்பட்டது, ஊருக்கு ஊர் போட்டி போட்டுக் கொண்டு