190
பெரியாரும் சமதர்மமும்
‘நீங்களும், காமராசரும் அரும்பாடு பட்டு வளர்த்த கல்வியின் வளம், நான் அமெரிக்காவில் இருக்கையில் தெளிவாகத் தெரிந்தது.
‘முன்பெல்லாம், அமெரிக்காவிற்கு அலுவல் பார்க்கச் சென்றவர்கள், சில நகரங்களைச் சேர்ந்தவர்கள்; சில மேட்டுக் குடிகள்.
‘இப்போது தமிழ்நாட்டின் சிற்றூர்களைச் சேர்ந்தவர்கள் பலர், அங்கே அலுவல் பார்க்கிறார்கள்; அநேகமாக எல்லாச் சாதியாரும் இருக்கிறார்கள். எவரும் தாக்குப் பிடிக்க முடியாமல், திரும்பி ஓடி வரும் நிலையில் இல்லை.
‘கல்விப் பெருக்கோடு, அவர்கள் தன்னம்பிக்கைப் பெருக்கும் பெற்று விட்டதால், சிறந்து விளங்குகிறார்கள்.
‘இன்னும் ஒரு பத்தாண்டு காலம், தமிழ் நாட்டு மாணவ மாணவியரை, ஊர் வம்புகளை மறந்து, கல்வியின் பால் நாட்டமாக இருக்குபடிச் செய்து விட்டால், தமிழ்நாட்டுச் சமுதாய நிலை, எளிதாக மாறி விடும்,’ என்று கூறினார்.
‘அண்ணா காட்டிய அவ்வழியையாவது பின் பற்றுங்கள்’ என்று சொல்லவும் ஆள் இல்லையே! இப்படியா, தமிழகம் தாழ்ந்து போக வேண்டும்.