பெரியாரின் இறுதி இலட்சியம் சமதர்மமே
195
காலட்சேபஞ் செய்து பிழைப்பு நடத்துகிறவர்களைப் போல, பாரதியின் பக்திப் பாடல்களை உச்சி மேல் வைத்துப் போற்றி, ‘பண்பாடு பண்பாடு’ என்று முழங்கி, சத்தியம் செய்வதில் போட்டி போடும் அறிஞர்களை நம்பி, வாழும் பாழ் வழிக்கு ஆளாகிக் கொள்கிறார்கள் அருமைத் தோழர்கள்.
பெரியாரும், அவரது இயக்கமும் பொது உடைமை இயக்கத்தைப் போல், தன்னேரில்லாத வரலாறும், தொண்டும், தியாகமும், துணிவும், உறுதியும் உடையது. இரண்டாவது உலகப் போரின் இறுதியில், அமெரிக்காவிற்கு அணு குண்டு கிடைத்தது போல, பொது உடைமைக் கொள்கைக்கு பெரியார் கிடைத்தார். அதனால், அடக்கு முறையை வெல்ல முடிந்ததோடு, 1952 தேர்தலில் முன்பின் அறியாத வெற்றியைப் பெற முடிந்தது. கம்யூனிஸ்ட்டுகள், இராசகோபாலாச்சாரியாரை ஆதரித்து உதவியதாகப் பெரியார் கணக்குப் போட்டது தவறாக இருந்தால், அவரைக் கண்டு பேசி, விளக்கியிருந்தால், அது சமதர்மக் கொள்கைக்கு உதவியிருக்கும். , தேவையற்ற இந்தித் திணிப்பு, இந்தி எதிர்ப்பு என்பது இந்திய சமதர்ம வாதிகள் உண்மையாக இணைய முடியாதபடி செய்திருப்பதைப் போல, உப்புக்குதவாத தப்பெண்ணம் சென்ற முப்பது ஆண்டுகளில் பெருமரமாக வளர்ந்தது: திராவிடர் கழகமும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் விலகிக் கொண்டே போகின்றன. பரஸ்பர பரிவு காட்ட வேண்டிய வேளைகளில், சில்லறை வீரங்களைக் காட்டி, சவடால் அடிக்கின்றன.
‘ஆரியர்’ என்னும் எருக்கந் தழைகளையும், ‘திராவிடர்’ என்னும் ஒதியந் தழைகளையும் உரமாக்கிப் போட்டு, மனிதர் என்கிற மன நிலையை உருவாக்க வேண்டிய கால கட்டத்தில், ஆரியத்திற்கு முட்டுக் கொடுக்க முயலும் மூத்த கம்யூனிஸ்டுகளைக் கண்டு வெருளுவதற்குப் பதில், ‘அந்தோ! அவலம்’ என்று கண்ணீர் வடிக்கிறேன்.
சட்ட மன்றத்திலும், நாடாளு மன்றத்திலும் சிலருக்கு இடம் பிடிப்பதற்கு, இன்றைய போக்கு போதும். வீட்டை விட்டு ஓடி வந்து விட்ட சிறுவன், எவர் எவருக்கோ சிற்றாளாக இருக்க வேண்டியதாகி விடுகிறது. அந்நிலைமைக்கு, நம் இரு தரப்பு முற்போக்குவாதிகள், தியாகிகள் தாழ்த்திக் கொள்ள வேண்டுமா? சமதர்மக் குறிக்கோள் நிறைவேற பதவி வேட்டைக்காரர்களின் ஆதரவு