44
பெரியாரும் சமதர்மமும்
ஒன்பதே. நாள் தோறும், சாலை விபத்துக்களில், பல நூறு ஒன்பது உயிர்களை நாம் இழக்கவில்லையா? சற்று சிந்தித்துப் பாருங்கள்.
ஆனால், நாடு தழுவிய எதிர்ப் புரட்சிகளும், வெளிநாடுகளின் படையெடுப்புகளும், நான்காண்டு தொடர்ந்த போதே, அந்நாடு இலட்சக்கணக்கான உயிர்ப் பலி கொடுக்க நேர்ந்தது. புரட்சியென்றால், உயிர்க் கொலை, இரத்த ஆறு முதலியவற்றை இணைத்துக் கொண்டு மிரளுவோர், இதைச் சிந்திக்கட்டும்.
1930க்குள் சோவியத் சமதர்ம ஆட்சி, பரிசோதனை நிலையைத் தாண்டி விட்டது; நிலையான வாழ்க்கை முறையாகி விட்டது. எழுத்தறிவு பெறாத முதியோர்க்கெல்லாம் எழுத்தறிவு கொடுப்பதில், வெற்றிக் கோட்டை நெருங்கி விட்டது. எல்லோர்க்கும் வேலை கொடுப்பதிலும், வெற்றி நிலையை எட்டிக் கொண்டிருந்தது. இவை சமதர்ம முறையின் சிறப்பினை உலகறியச் செய்தது.
தன்மான இயக்கத்தின் தந்தை, பெரியார் ஈ.வெ.ராமசாமி சமதர்மக் கொள்கையை ஏற்றுக் கொண்டார். காலத்தின் கருவூலமாகிய இம்முறையைப் பரப்புவதில் முனைந்தார். பிறவி ஏற்றத் தாழ்வைத் தகர்க்கத் துணிந்த சிந்தனைக்குச் செல்வ ஏற்றத் தாழ்வைத் தாக்க முற்படுவது இயல்பாக அமைந்தது.
விளைவு? 1931 ஆகஸ்டில், விருதுநகரில் நடந்த மூன்றாவது மாகாண சுயமரியாதை வாலிபர் மாநாட்டில், வெளிப்பட்டது.