பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

பெரியாரும்‌ சமதர்மமும்‌

இயற்கைச் செல்வங்களும், தொழிற்சாலைகளும் மட்டுமா இக்காலச் செல்வங்கள்? இரயில்வேக்களும், செல்வங்களே. கப்பல், படகு முதலிய நீர்வழிப் போக்குவரத்துச் சாதனங்களும், செல்வத்தின் உருவங்களே. வங்கிகளில் சேர்ந்துள்ள பணமும், செல்வமாகும். இவை அனைத்தும், நாட்டு மக்களின் பொது உடைமையாக வேண்டும்.

தொழில்களை நாட்டுடைமையாக்கி விட்டு, மற்றவற்றைத் தனியுடைமையாக்கி வைத்திருந்தால், சமதர்மம் நடைபெறாது. தொழிற்சாலைப் பொருள்களை விரைந்து எடுத்துக் கொண்டு போக முடியாதபடி, போக்குவரத்துகளின் உடைமையாளர்கள் கதவடைப்பு செய்யக் கூடும். வங்கிகள் தனியார் கைகளில், தொடர்ந்து இருக்குமானால், நாட்டுடைமைத் தொழில்களை நெருக்கடியில் சிக்க வைக்க, அவ்வங்கிகளைப் பயன்படுத்தலாம். ஆகவே, சுயமரியாதை இயக்க சமதர்மக் கட்சியின் வேலைத் திட்டம்:

‘எல்லாத் தொழிற்சாலைகளையும், இரயில்வேக்களையும், பாங்கிகளையும், படகு—நீர் வழிப் போக்குவரத்து சாதனங்களையும் பொதுமக்களுக்கு உரிமையாக்குவது’ என்று கூறுகிறது.

அப்போது விமானப் போக்குவரத்து வளராததால், அச்சாதனத்தை நாட்டுடைமையாக்குவது பற்றி குறிக்கவில்லை என்று கொள்ளலாம்.

அடுத்து நிலம் பற்றி மேற்படி வேலைத் திட்டம் கூறுவதைக் கேளுங்கள்.

‘எந்த விதப் பிரதிப் பிரயோசனமும் கொடுபடாமல், நாட்டில் உள்ள எல்லா விவசாய நிலங்களையும், காடுகளையும், மற்ற தாவர சொத்துக்களையும் பொதுமக்களுக்கு உரிமையாக்குவது.’ இது நான்காவது திட்டமாகும்.

1917இல் அக்டோபர்ப் புரட்சியின் போது, ‘உழைப்பவர்களுக்கே நிலம்’ என்பதே இரஷ்யாவில் முழக்கமாயிருந்தது. புரட்சி வெற்றி பெற்று நிலைத்த பிறகு, அடுத்த கட்டத்திற்கு சோவியத் நாடு சென்றது. அது என்ன கட்டம்?

ஒவ்வோர் உழவரும், துண்டு நிலம் வைத்துக் கொண்டு, பாடுபடுவதை விட்டு, ஊரில் உள்ள நிலமனைத்தையும் இணைத்துக்