இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிவகங்கையில் சுயமரியாதை மாநாடு
73
பிழைகளை, எப்படித் திருத்த வேண்டுமென்று ஆலோசனை கூற உரிமை, தகுதி, பொறுப்பு மூன்றும் பெற்றவர்.
சட்டமன்றங்களின் வழியாகச் சமதர்மத்தைக் கொண்டு வர முடியாது. அதை நடை முறைப்படுத்த, தொழிலாளர் அமைப்புகளின் வழியில் போர் புரிய வேண்டும் என்று தோழர் இராமநாதன் கூறியது அன்றைக்கே பொருள் நிறைந்த கருத்தாகும்.
சார் அரசின் கடைசிப் பாராளுமன்றத்தில், பொது உடைமைவாதிகளான சோஷியலிஸ்ட் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் இருந்தார்கள், அவர்களால் பொருளியலில், எவ்வித பெரும் மாற்றத்தையும் கொண்டு வர முடியவில்லை என்பது வரலாறு.