80
பெரியாரும் சமதர்மமும்
உயர் நிலையிலிருப்பதால், பாதிக்கப்படுவோர், அரை தலைமுறையில் மனக் குறையை ஓட்டி விட்டு, நன் மக்களாக—சமத்துவ மக்களாக—வாழ ஒப்புவார்களென்று, பெரியார் நம்பக் காரணம் என்ன? இரஷ்ய அக்டோபர்ப் புரட்சியால், அதிர்ச்சியும், ஆத்திரமும் கொண்ட உயர்ந்தோர், முதலில் நான்காண்டுகள் போராடிப் பார்த்தார்கள்; அதில் தோற்றார்கள்; பிறகு புதிய சமதர்ம முறைக்குத் தங்களைப் பக்குவப் படுத்திக் கொண்டார்கள். சோவியத் மக்களின் மனநிலையை நேரில் அறிந்து வந்த பெரியார், நம் மக்களும் மனித நிலையடைய, அவ்வளவு விரைவில் உடன்படுவார்கள்; அவ்வளவு எளிதில் மனப்பக்குவம் பெறுவார்கள் என்று எதிர்பார்த்தார்.
நடந்ததோ வேறு வகையில். முதலில் அரசின் போக்கைக் கவனிப்போம்.
பிரிட்டனில் பேச்சுரிமைக்குப் பெருமதிப்பு கொடுத்து வந்த ஆங்கிலேயர், அதே உரிமையை இந்தியர்களுக்கு வழங்கவில்லை. 1857இல் நடந்த முதல் இந்திய உரிமைப் போர் ஆங்கிலேய ஆட்சியாளரிடை கிலியை ஏற்படுத்தி விட்டது. நிர்வாக நடைமுறைகள் பற்றிக் குறை சொன்னாலும், அதை ஆட்சியைக் கவிழ்க்கும் சதியாகவே கருதி, அஞ்சத் தலைப்பட்டார்கள். பல மாவட்டங்கள் முழுவதுமே, பொதுக்கூட்டங்களைத் தடை செய்து பார்த்தார்கள். அச்சகக் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்து பார்த்தார்கள். ஆள் தூக்கிச் சட்டமியற்றி, அதைப் பயன்படுத்தி அடக்க முயன்றார்கள். ஆட்சியை இழக்க எவருக்கு மனம் வரும்? எல்லாக் கெடுபிடிகளும், அடக்கு முறைகளும் எதிர்ப்பை, கிளர்ச்சியை, போர்க் குரலை வளர்ப்பதையே கண்டது இந்திய ஆங்கிலேய ஆட்சி.
‘மீரத் சதி,’ ஆட்சியின் கிலியைப் பல மடங்கு பெருக்கிற்று. அவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் பலர், பொது உடைமைவாதிகள். பகத் சிங்கின் லாகூர் குண்டு வீச்சு, அடக்கு முறையைப் பெருக்கிற்று. அரசு பொது உடைமைக் கொள்கையைப் பரப்புவதைத் தடை செய்தது.
உடனே, நிர்வாகத்தின் நீண்ட கரங்கள் பலரைப் பிடித்தன; தொல்லைப் படுத்தின. 20-12-33 அன்று பிற்பகல் 2 மணிக்குத் தந்தை பெரியாரும், அவரது தங்கை கண்ணம்மாளும் திடீரெனக் கைது செய்யப்பட்டார்கள். பெரியார் அப்போது ‘புரட்சி’யின்