பக்கம்:பெரியார்—ஒரு சகாப்தம்.pdf/20

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

15


ஒப்புக்கொள்கிறேன்; - அந்தப் போராட்டத்துக்கான இன்றையதினச் சூழ்நிலை என்ன? எந்த நிலையில் மொழிப்பிரச்னை வந்திருக்கிறது? என்று பார்க்க வேண் டும். 1934,35,36-ம் ஆண்டுகளில் இந்தியை அவர்கள் ஆட்சிமொழி என்று அல்ல; இணைப்பு மொழி என்றல்ல; தேசிய மொழி, என் றழைத்தார்கள். இந்தத் தேசத்திற் கென்று ஒரு மொழி உண்டு; அதுதான் இந்தி; இந்தத் தேசத்திற்கு இருக்கத் தக்க தேசிய மொழி இந்திதான் என்று 1935-ல் அவர்கள் சொன்னார்கள். பெரியார் அவர்களின் போர் முறையின் தன்மை உங்களிலே பல ருக்கு நன்றாகத் தெரிந்திருக்கும் என்று கருதுகிறேன்.. அவர்கள் எதிரில் உள்ள படையை மட்டுமல்ல; முத லிலே அப்படைக்கு எங்கே மூலபலம் இருக்கிறது என்று கண்டு பிடித்து அந்த மூல பலத்தைத் தாக்குவது தான் அவருடைய போர். முறையாகும்,

தேசியத்தை எதிர்த்து பெரியார் போர்க்கொடி
ஆகையினால், இந்தியாவின் தேசிய மொழி இந்தி

தான் என்று சொன்னவுடன், 'தேசியம் என்பது மகாப் புரட்டு! இந்தியா என்கிறீர்களே, இந்தியா என்பது மிகப்பெரிய கற்பனை' என்றுகூறி, அவை இரண்டை யும் உடைத்து எறிவதுதான் என்னுடைய வேலை' என்று கிளம்பினார்கள். அப்படி இந்தியைக் கொண்டு வந்தவர்கள் இந்தியைக் காப்பாற்றிக்கொள்ளக் கருதி தேசியத்தையும், இந்தியாவையும் உடைத்துவிடக் கூடாது என்று தேசியம்' என்று சொல்லியதை மாற் றிக்கொண்டு, “இந்தியாவில் தேசிய மொழிகள் பதி னான்கு இருக்கின்றன. அதில் - ஒன்றுதான் இந்தி : ஆனால், இந்தி பெரும்பாலானவர்கள் பேசுவதால் இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்கவேண்டு' மென்று சொன்னார்கள். அப்போது , - பெரியார், 'ஆட்சிமொழி என்பது பின்னால் இருக்கட்டும்; உங்க ளுடைய ஆட்சியின் லட்சணம் என்ன? பார் யாரை ஆளவேண்டும்?. எதற்காக ஆளவேண்டும்?' என்று ஆட்சி முறையைப்பற்றி அவர்களைத் தாக்க ஆரம் பித்தார்கள். உடனே இந்தியை ஆதரிக்கிறவர்கள்