பக்கம்:பெரியார்—ஒரு சகாப்தம்.pdf/26

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

21

வாக எடுத்துச் சொல்லிக்கொண்டு வருகிறார்கள். அப்படிப்பட்டவர் இன்று பெரியார் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தியது. என்னைப் பொறுத்த வரையில் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது என்பதனை நான் சொல்லிக்கொள்ளவா வேண்டும்? ஒரு சமயம் அந்தப் பொன்னாடைக்கும் பெரியா ருடைய மேனிக்கும் வித்தியாசமில்லாததால், அது பொன்னாடை என்று அறிந்துகொள்ள முடியாமலிருந் திருக்கலாம். ஆனால், அதைப் போர்த்திய நேரத்திலே செட்டிநாட்டர்சர் அவர்களிடத்தில் காணப்பட்ட கனிவு. அதைக் கண்டவுடன் பெரியாருக்கு ஏற்பட்ட உருக்கம், அதைக் கண்டு நமக்கெல்லாம் ஏற்பட்ட மகிழ்ச்சி இவை வாழ்க்கையில் என்றோ ஒரு நாள் கிடைக்கக்கூடியவை அதனால்தான், அந்த மகிழ்ச்சியை இனியும் நாம் பெற வேண்டும் எனபதால்தான் பெரியார் அவர்கள் நூறு ஆண்டுகள், இரு நூறு ஆண்டுகள் வாழவேண்டுமென்று நாம் நம்முடைய நல்லெண்ணத்தை அவருக்குத் தெரி வித்துக்கொள்கிறோம்.


பெரியார் வாழ்வே தமிழினத்தின் பெருவாழ்வு
ஏன் அவ்வளவு காலம் வாழவேண்டுமென்று சொல்

கிறோமென் றால், அவர்களை மறக்கிற நேரத்தில், நம்- மையறியாமல் ஒரு பலவீனம் நமக்கு வருகிறது; அவர் களை எண்ணிக்கொள்கிற நேரங்களில் நமக்குத் தைரி யம் வருகிறது. அவர் இருக்கிறார் என்ற நினைவு வரும் போது, அவர் இருக்கிறார் என்றவுடன், பரவாயில்லை பார்த்துக்கொள்ளலாம் என்ற தைரியமும் நமக்கு வருகி றது. அந்த நினைவு அரசியல் துறையில் உள்ள என் போன்றோர்க்கு மட்டுமல்ல; வணிகத் துறையில் தமிழர் கள் சங்கடப்படும் போது பெரியாரைத்தான் எண்ணிக் கொள்கிறார்கள். பெரியார் சொல்கிறபடி நடந்தால் நாம், பிழைக்க முடியும் என்று தமிழ்ப்புலவர்கள் கருதுகி றார்கள். பெரியார் சொல்கிறபடி இந்தி’ விரட்டப்பட்ட டால்தான் நமக்கு மதிப்புக் கிடைக்குமென்று எண்னும் அரசியல் வாதிகளைப்பற்றி நான் சொல்லத்தேவை யில்லை.. இன்றைய தினம் பெரியாருடைய குடும்பத்