பக்கம்:பெரியார்—ஒரு சகாப்தம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

பொதுத் தொண்டினை
ஓர் கலையாகவே
மாற்றிவிட்டார் பெரியார்

"......பெரியார் அவர்கள் சொன்னார்கள் - நான் சொன்னதை யெல்லாம் அப்படியே நம்பாதீர்கள்: உங்கள் அறிவைக்கொண்டு சிந்தித்து, உங்களுக்குச் சரியென்று பட்டதை எடுத்துக்கொள்ளுங்கள்' என்றார்கள், ஏன் அப்படிச் சொன்னாரென்றால், சிந்திக்க ஆரம்பித்தால் அதில் எதுவும் சிறு தவறு கூட இருக்காது. அவர் சொன்னவையெல்லாம் உண்மை என்பது நன்றாகவே தெரியும். அதைக் கண்டுபிடிப்பதில் சிந்திப்பவனுக்குத் தைரியம் தானாகவே வந்துவிடும். அப்படிப்பட்ட பகுத்தறிவுக் கருத்துக்களைப் பரப்பிவருகிற பெரியார் அவர்கள் பல ஆண்டுகாலமாக எடுத்துச்சொல்லியும், இன்னமும் மக்கள் திருத்தாமலிருக்கிறார்களே என்ற கவலையால் கடுமையாக நம் இழிநிலையைச் சுட்டிக்காட்டுகிறார். பெரியார் அவர்கள் காலத்தில் அவரது கண்களுக்குத் தெரியுமாறு நாட்டில் இன்று பல சீர்திருத்தங்கள் நடைபெற்றிருக்கின்றன.

பெரியார் அவர்கள் தனது தொண்டின்மூலம் பொதுத்தொண்டினை ஒரு கலையாகவே மாற்றியுள்ளார்கள் ரயில் புறப்படுகிற நேரத்தில் ரயிலில்

போகவேண்டியவன் காப்பியை அருந்திக்கொண்டு மிக் சாவகாசமாக இருந்தால் பெரியவர்கள், நாலுவார்த்தை திட்டி, காப்பி பிறகு குடிக்கலாம்; வண்டி போய்விடும்; வண்டியிலேறு என்பதுபோல, "உலகம் இவ்வளவு முன்னேறியிருக்கிறது; நீ இன்னும் இப்படி இருக்கிறாயே?" என்ற கவலையால், கடினமாகவும், வேகமாகவும் வலியுறுத்தி நமக்குப் பகுத்தறிவைப்புகட்டுகின்றார்.