பக்கம்:பெரியார்—ஒரு சகாப்தம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

அவர் பேசும்போது அதை விட்டுவிட்டாரே இதை விட்டுவிட்டாரே என்ற உணர்வு ஏற்பட்டது. அப்படித்தான் எல்லோருக்கும் முதலில் கசப்பாகத் தோன்றும்; சிந்தித்தால் நான் உண்மையை உணர முடியும். நான் பொறுப்பேற்றுள்ள தமிழ் நாட்டரசு மக்களிடையே பரவியிருக்கும் மூடப்பழக்க வழக்கங்களை நீக்கப்

பாடுபடும். நாம் மட்டுமல்லாமல், நகராட்சிகள், பஞ்சாயத்துக்கள், ஒன்றிப்புக்கள் பகுத்தறிவு வளர்வதற்குப் பாடுபட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். அவைகள் கண்காட்சிகள் கடத்த வேண்டும். கண்காட்சியில் கடைத்தெருக் கடைகளை ஒரு பந்தலில் கொண்டு வந்து வைப்பதாக இருக்கக்கூடாது. உலகின் முன்னேற்றத்தையொட்டி கல்வி போக்குவரத்து—ஒழுக்கத்துறை—முன் நம்பிய கடவுள், இங்போது எப்படி அக்கடவுள்களை மக்கள் விட்டார்கள் என்பனவற்றை விளக்கக்கூடியதாக அமைய வேண்டும். பெரியார் அவர்கள் சுட்டிக்காட்டியதை கவனத்தில் கொண்டு நகராட்சியினர் தங்களால் இயன்ற அளவு தொண்டு வேண்டுகின்றேன்.'

[திருப்பத்தூர் நகராட்சி மன்றத்தின் 80-வது
ஆண்டு நிறைவு விழாவில் 13 12-67 அன்று
கலந்துகொண்டு ஆற்றிய உரையின் ஒரு பகுதி]



எதிர்காலம்தான் முக்கியம்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு உலகம் எப்படி இருக்கும் என்ற சிந்தனையும், கண்ணும்கொள்ள எனக்கு விருப்பமேயொழிய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைப் பற்றிய அக்கறை கிடையாது.

(11-2-44ல் ஈரோடு
மாநாட்டில் பேசியது)