பக்கம்:பெரியார்—ஒரு சகாப்தம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

னைத் தீர்ப்பதற்கு அய். நா. வில் பேச, அவரை நேரு விரும்பி வேண்டிக்கொண்டார் என்றால், அவர் திறமையைக் கருதியே அல்லவா? சர்.ஏ.ராமசாமி அய். நா, சென்று வந்ததுமட்டுமல்ல; வென்றும் வந்தார். இப்படி நம்மிலே பல அறிஞர்கள், படித்தவர்கள் இருக்கிறார்கள். பிற்பட்ட இனம் என்று தவறான காரணங்களைக் காட்டி, அடக்கி வைக்கப்பட்டிருந்தவர்கள் இன்று உயர் பதவிகளில், உத்யோகங்களில் நல்ல செல்வாக்கோடு இருக்கின்றனர். இந்த அளவு அதிகப்பட வேண்டும். ஆகவே, இத்தகைய வளர்ச்சி பெரியார் அவர்களின் அரை நூற்றாண்டு இடைவிடாத் தொண்டினால் ஏற்பட்டது என்பதனை யாராலும் மறுக்க முடியாது.

சமுதாய புரட்சியே
பெரியாரின் முக்கிய பணி

பெரியார் அவர்கள் எடுத்துக்கொண்டிருக்கிற பணி சமுதாயத்தை மாற்றியமைக்கும் புரட்சிகரப் பணியாகும். அரசாங்கத்தால் மட்டுமே ஒரு சமுதாயத்தை அடியோடு மாற்றியமைத்துவிட முடியாது. அரசாங்கத்திற்கு அந்த வலிமை இல்லை. என்னிடம் ஒரு அரசு அளிக்கப்பட்டிருக்கிறது என்றாலும் அது ஒரு பெரிய சர்க்காருக்குக் கட்டுப்பட்டுக் காரியமாற்ற வேண்டிய ஒன்றே தவிர, தன்னிச்சையாக காரியமாற்ற முடியாது. இதனைப் பெரியாரவர்கள் நன்கு அறிவார்கள். உலகத்திலே எந்த நாட்டிலேயும் சர்க்காரால் சாதித்ததைவிட, தனிப்பட்டசீர்திருத்தவாதிகளாலேயே சமூகம் திருத்தப்பட்டிருக்கிறது.

பெரியார் அறிவுரைதான்
சமூகத்தை முன்னேற்றுகிறது

பெரியார் அவர்கள் தரும் பெரும். பேருரைகளால், அவருடைய சலியாத உழைப்பினால், அவர் தந்துள்ள பகுத்தறிவு: கருத்துக்களினால்தான் இன்னறய தினம் நம் சமூகம் மிக நல்ல அளவிலே முன்னேறிக்கொண்டு