பக்கம்:பெரியார்—ஒரு சகாப்தம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பண்பு


"நான் பெரியாரவர்களர்களுடன் வடநாடு சுற்றுப்பயணம் சென்றிருந்தேன், அங்குள்ளவர்கள் நம்மக்களைவிட மூடநம்பிக்கையுள்ளவர்கள். பெரியாரவர்களின் தோற்றத்கை கண்டு, அவர் தென்னாட்டிலிருந்து வந்திருக்கும் பெரிய சாமியார் என்றும், நான் அவரது சிஷ்யன் என்றும் கருதிவிட்டார்கள். அப்படி நினைத்துத்தான், ஆரியதர்மத்தை வளர்ப்பதற்காக வென்றே செயல்பட்டவரான சிரத்தானந்தா கல்லூரியின் தலைவர்,பெரியார் அவர்களைப் பார்த்துத் தங்கள் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்குத் தாங்கள் வந்து அறிவுரை கூறவேண்டுமென்று கேட்டார். அவரும் ஒத்துக்கொண்டார். தான் எதைச் சொல்லுகிறாரே அதை மற்றவர்கள் உடனடியாகக் கடைப்பிடிக்க வேண்டும்; அதன்படி நடக்கவேண்டும் என்று கருதுபவர் அல்ல பெரியார். பிறர் கடைப்பிடிக்கும் மார்க்கத்தில் சென்று, அவர்கள் மனம் புண்ப்டாமல் அதனை எடுத்துக் கூறுவதுதான் அவர் பண்பு.

வடநாட்டு மாணவர்களைக் கவர்ந்த
பெரியார்

சிரத்தானந்தா கல்லூரிக்குச் செல்லவேண்டுமென்றதுமே எனக்குச் சற்றுப் பயமாகத்தான் இருந்தது. அங்குப்போய் நமது கருத்தைச் சொன்னால், அவர்கள். எப்படி நடந்துகொள்வார்களோ என்று பயந்தேன்; என்றாலும் துணிந்து பெரியாரவர்கள் பின்சென்றேன். கல்லூரிக்குள் நுழையும்போதே அங்கிருந்த மாணவர்கள் தங்கள் வழக்கப்படி என் முகத்திலும், அவர் முகத்திலும் சந்தனத்தை அள்ளிப் பூசினார்கள். எனக்குச் சங்கடமாக இருந்தது. என் நிலையினைக்-