பக்கம்:பெரியார்—ஒரு சகாப்தம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

சமூக நீதியின் இருப்பிடம்
பெரியார்!

"சமூக நீதியற்ற தன்மைகளுக்கும் கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட மக்களுக்காகத் தமிழ்நாட்டில் போராட்டத்தை நடத்தியவர் பெரியார் (ராமசாமி) அவர்களே. அதேபோன்று தெனாலியில் முதலில் குரலெழுப்பியவர் ராமசாமி சவுதரி என்பவராவார். இந்த இரு பெரும் சமூகச் சீர்திருத்தத் தலைவர்களுக்கும் ஒரே பெயர் பொருந்தியிருப்பது வியப்புக்குரியதாகவிருக்கிறது. கடவுளின் அவதாரமென்று கூறப்படுகிற ராமசாமியையும் அதையொட்டிய கருத்துக்களையும் நிறுவனங்களையும் எதிர்த்து—ராமசாமி என்ற அதே பெயருள்ள இரு பெரியார்களும் கண்டன மாரிகளைப் பொழியும் பிரசாரங்களைச் செய்யும் தகுதி பெற்றவர்களாகியுள்ளனர்.

தமிழ்நாட்டில் நாங்கள் இந்தப் பிடிவாதமான மக்களை எங்களுடைடய கருத்துக்களுக்கு ஏற்ப வளைத்துக்கொண்டு வருவதற்கு இருபதாண்டு காலமாக விவாதித்து வந்திருக்கிறோம்; இறுதியாக நாங்கள் வெற்றி பெற்றோம். பூமியிலுள்ள தீமையை ஒழிக்கக் கடவுள் 10 அவதாரங்களுக்குக் குறையாமல் எடுத்ததாகக் கூறப்படுகிறகிறது. ஆனாலும் தீமைகள் முழுவதும் ஒழிந்தபாடில்லையே. மனிதர்களாகிய நமக்குத் தான் தீமைகள். எதிராகப் போரிட்டு, அதை வேரோடு ஒழித்துக்கட்டும் மிக உயர்ந்த கடமை ஏற்பட்டிருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு சுயமரியாதைக்காரர்களாகிய எங்களில் சிலர் சுயமரியாதைத் திருமணம் என்ற சீர்திருத்தத் திருமணங்களை நடத்த, போலீஸ் உதவியை நாடவேண்டியதாயிருந்தது. அந்தத் திரு-