பக்கம்:பெரியார்—ஒரு சகாப்தம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

-

பகுத்தறிவு ஊட்டிய
பெரியாரே என் தலைவர்

"...... நமது தமிழ் நாட்டில் மட்டும், வயதானவர்கள் வீட்டிற்குப் பெரியவர்களாக வீட்டிலேயே இருப்பார்கள். அவரது பிள்ளைகள் வெளியூர்களில் ஒருவர் டாக்டராகவும். ஒருவர் எஞ்சினீயராகவும், ஒருவர் வக்கீலாகவும் இருப்பர். வீட்டில் நடைபெறும் விழா நிகழ்ச்சியின் போது, அந்தப் பெரியவர் தன் மகன்களைச் சுட்டிக்காட்டி "அதோ போகிறானே அவன்தான் பெரியவன், டாக்டராக இருக்கிறான்; இவன் அவனுக்கு அடுத்தவன், எஞ்சினீயராக இருக்கிறான் ; அவன் சிறியவன், வக்கீலாக இருக்கிறான். இவர்கள் எல்லோரும் எனது பிள்ளைகள்” என்று கூறி, பூரிப்பும் மகிழ்ச்சியும் அடைவார். அதுபோன்று பெரியாரவர்கள், தம்மாலே பயிற்சியளிக்கப்பட்டவர்கள் பல்வேறு கட்சிகளிலிருந்தாலும் 'அவன் என்னிடமிருந்தவன் ; இவன் என்னுடன் சுற்றியவன் என்று சொல்லிக்கொள்ளக்கூடிய பெருமை இந்தியாவிலேயே ஏன் ? உலகிலேயே பெரியார் அவர்களுக்குத்தான் உண்டு. அவர் காங்கிரசிலிருப்பவர்களைப் பார்த்து—தி. மு. க.வில் இருப்பவர்களைப் பார்த்து—கம்யூனிஸ்டுக் கட்சியில் இருப்பவர்களைப் பார்த்து—சோஷ்யலிஸ்டுகளைப் பார்த்து இவர்கள் என்னிடமிருந்தவர்கள்; இவர்களுக்கு நான் பயிற்சி கொடுத்தேன்; இன்று இவர்கள் சிறப்போடு இருக்கிறார்கள்' என்று சொல்லிக்கொள்ளக்கூடிய பெருமை அவர்கள் ஒருவரையே சாரும்.

பெரியார் அவர்கள் தமிழ்போல் என்றும் இளமை குன்றாது வாழவேண்டும்; எந்தக் குழந்தையும் தப்பிப்போகாமல் பாதுகாக்க வேண்டும். அவர் என்னுடைய தலைவர்! நானும் அவரும் பிரிகிறபோதுகூட நான் அவரையேதான் தலைவராகக் கொண்டேன்; வேறு