பக்கம்:பெரியார்—ஒரு சகாப்தம்.pdf/9

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

4


களில் பல சுயமரியாதைத் திருமணங்களை ஏற்று நடடத்தியிருக்கிறது, அவர்கள் நமது வணக்கத்திற்குரிய வர்களாவார்கள். சட்டப்படி செல்லாது என்று தெரிந்த தனால் ஏற்படும் தொல்லைகளையும் பொருட்படுத் தாமல், மக்களுக்காகத்தான் சட்டம் என்பதை உணர்ந்து, சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்ட வர்கள் கமது வணக்கத்திற்குரியவர்கள் ஆவார்கள்.

  எங்களது ஆட்சியில் விரைவில், சுயமரியாதைத் 

திருமணத்தைச் சட்டப்படி செல்லத்தக்கதாக சட்டம் கொண்டுவர இருக்கிறோம். ஏற்கனவே நடத்திவைக்கப் பட்ட... திருமணங்களும் சட்டப்படி செல்லத்தக்கதாகும் என்று சட்டம் கொண்டுவர இருக்கிறோம். பெரியார் அவர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டி ரூந்ததை நாங்கள் வந்து செய்யும் வாய்ப்புக் கிடைத்த மைக்காகப் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். நெடுந் தொலைவு பிரிந்து சென்றிருந்த மகன், தன் தந்தைக்கு மிகப் பிடித்தமான பொருளைக் கொண்டுவந்து கொடுப் பதைப் போல, நாங்கள் பெரியார் அவர்களிடம் இக் கனியை (சட்டத்தை சமர்ப்பிக்கிறோம். இதை எனக்கு முன் இருந்தவர்கள், கூட செய்திருக்க முடியும். நான் போய் நடத்தவேண்டிய வாய்ப்பு எனக்குக் கிடைத்த மைக்குப் பெருமகிழ்ச்சியடைகின்றேன். நான் திருமணம் ஆனபின் இயக்கத்திற்கு வந்ததால், எனக்கு இந்த வாயப்புக் கிடைக்காமல் போய்விட்டது 11" '

  (திருச்சி நகரிலுள்ள பெரியார் மாளிகை" யில் 

7-6-67 அன்று தந்தை பெரியார் அவர்களால் நடத்தி வைக்கப்பெற்ற மறைந்த ப, ஜீவாநந்தம் மகள் திருமண விழாவில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி) -