பக்கம்:பெரியார் அறிவுச் சுவடி.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பெரியார் சொல் கேள்

பகுத்தறிவு என்பது மனிதனுக்கு ஜீவநாடி - உயிர்நாடி ஆகும். ஜீவராசிகளில் மனிதனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. இதில் மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கின்றானோ, அவ்வளவுக்கவ்வளவு காட்டுமிராண்டி என்பது பொருள்.

மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு பகுத்தறிவில் தெளிவு பெறுகின்றானோ அவ்வளவுக்கவ்வளவு பக்குவமானவன் என்பது பொருள்.

பகுத்தறிவு பெறும்படியான சாதனம், நமக்கு நீண்ட நாளாகவே தடைப்படுத்தப்பட்டு வந்துள்ளது. நம்மை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய பார்ப்பனர்கள் நாம் பகுத்தறிவு வளர்ச்சி அடைய ஒட்டாமல் தடை செய்துகொண்டே வந்துள்ளார்கள்.


தடைக்கற்கள்

மக்களிடையே பகுத்தறிவைத் தடைப்படுத்த கடவுள், மதம் சாஸ்திரம் முதலியவைகளைப் புகுத்தி நம்பும்படிச் செய்துவிட்டார்கள்.