பக்கம்:பெரியார் அறிவுச் சுவடி.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவாகக் கடவுளைப் புகுத்தியவன், கடவுள் பக்திக்கு முதல் நிபந்தனையாகக் கடவுள் பற்றிச் சிந்திக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன்தான் ஏற்படுத்தினான்.

கடவுள் பஞ்சேந்திரியங்களுக்கும் எட்டமுடியாத வஸ்து, அறிவுக்கு எட்டமுடியாத வஸ்து. பஞ்சேந்திரியம் என்றால் மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த அய்ந்துக்கும் கடவுள் எட்டமாட்டார்; இந்த அய்ந்தும் கொண்டு கடவுளைத் தேடவும் கூடாது என்பதாகும்.

இந்த இந்திரியங்களை எல்லாம் மீறிச் சிந்திக்க மனது என்று ஒன்று உள்ளது. இந்த மனதுக்கும் எட்டாதவர் கடவுள் என்று இத்தனை நிபந்தனைகளையும் போட்டுக் கடவுளைச் சொன்னான்.

கடவுள் என்றால் அப்படியே ஒத்துக்கொள்ள வேண்டும்; எங்கே-ஏன் -எப்படி என்று கேட்கக்கூடாது என்று கூறிவிட்டார்கள்.

கடவுள் போலவே மதத்தைப் பற்றியும் என்ன என்று சிந்திக்கக் கூடாது; மதம் எப்போது ஏற்பட்டது-யாரால் ஏற்பட்டது