பக்கம்:பெரியார் மன்றோ.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்ருேவும் இந்திய மக்களும் 99

கூட்டமாக மக்கள் வந்துபோய்க்கொண்டிருக்கார்கள். ஒவ்வொருவரும் ஒரு மணி கோம் பேச ஆசைப்பட்டார்கள். தன் ககப்பனர் பட்ட முப்பதுவருஷக் கடனப்பற்றி ஒருவர் ஒரு பெருங்கதை கூறினர். சண்டைக் காலத்தில் தான் வெளியே சென்றிருந்தபொழுது தனது சொத்தைத் தமையன் எடுத்துக் கொண்டுவிட்டான் என்று ஒருகதை வேருெருவர் விளம்பினர். தனது மாட்டைவிட கன்முக உழைத்த மனேவி இறந்துவிட்டதால், கிரமமான வரியைத் தன்னுல் செலுத்த முடியவில்லையென மற்குெருவர் மொழிக் தார். இவை யெல்லாவற்றையும் மன்ருே கேட்டுக்கொண் கருக்க வேண்டியவராயிருக்கார். ஒவ்வொருவரும் வருணிப்ப திற் றேர்ந்தவராக இருந்ததால், அரை மணிக்குட் கதையை முடித்துவிட்டாற் போதுமென மன்ருே கினைப்பதுண்டு. கதையின் கோடியில் தொடங்கினும் போதுமென மன்ருே அடிக்கடி சொன்னலும், பயன்விளைவதில்லை; மன்ருே எல்லா விவரணங்களையும் அறிந்து கொள்ளவேண்டும் என்று அவர்

கள் வற்புறுத்தி வந்தார்கள்.

மன்ருே முதன்முறை சகாக்லாக்கிற்குத் திரும்பிவிட்டு வந்தபொழுது, சென்னையில் அவரைக் தெரியாதவர்களும் வந்துவந்து பார்த்துச் சென்றனர். காணம், அவர் திரு மணமகித் திரும்பியதேயாம். வந்து பார்த்தவர்களுடைய வீட்டிற்கு மணமகனும் மணமகளும் போய்வரும் வழக்கம் மன்ருேவுக்குப் பிடிக்கவில்லை. வந்துவிட்டுப் போகும் ஒவ்வொருவர் வீட்டிற்கும் போய்வருவதென்ருல், காலம் விளுகக் கழியுமே யென்.அ கிசுத்தே மன்ருே வருக்கினர்.