பக்கம்:பெரியார் மன்றோ.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 பெரியார் மன்ருே

இருபதாம் நாளன்று சென்னையிற் கோட்டைக்குப் போகும் வழியில் மலைச்சாலைக்கு அருகாமையில் கிறந்து வைக்கப் பட்டது. அச்சிலை மன்ருே குதிரை பூர்ந்து போவது போன்று அமைக்கப்பட்டுள்ளது. அவர் சுற்றுப் பிரயாணஞ் செய்த காலங்களில் புகை வண்டிகள் கிடையாவன்ருே? அவர் குதிரைமீதேறி ஊர்ஊராகச் சென்று, குடிகளைகண்ணி, அவர்களுடைய குறைகளைக் கேட்டு, முறைசெய்து வந்ததை கினைப்பூட்டுதற்கே போலும் இச்சிலை இங்கனமமைக்கப் பட்டுள்ளது:

மன்ருே மாண்ட மூன்றும் கள் கீழ்வருங் குறிப்பு அரசாங்கம் வெளியிட்ட ஒருசிறந்த தாளிற் காணப்பட்டது:. “அவரது உரம் பெற்ற அறிவும், அடையலாகாச் சாமர்த் கியமும், இளைப்பிலா அழைப்பும், அறிவினிட்டமும், கீழ் காட்டுப் பாண்டித்தியமும், சுதேச வாசிகள் போர்ச் சேவகர்கள் ஆகியோருடைய பழக்க வழக்கங்களை யறிக் திருக்கும் ஆற்றலும், பொஆமையும், கட்சிக்கெளிமையும் இ னி ைம யு ம், அவர் எவ்வேலையிலிருந்திருந்தாலும் அவருக்குப் பீடும்பெருமையும் அளித்திருக்கும்.” சென்னை பில் ஒரு பெரும் பொதுக் கூட்டம் கூடி, மன்ருேவின் மறைவைக் குறித்து எல்லா வகுப்பாரும் துக்கப்படுவ தாகவும், அவருக்குள்ள புகழில் பெருமை கொள்வதாகவும், தீர்மானங்கள் நிறைவேற்றிற்று. அக்கூட்டத்திற் கூடிைேர் பலர் மன்ருேவின் உருவச்சிலைக்காக கிரம்பப் பனங் கொடுத் தனர். ஒன்பதாயிரம் பவுன் வசூலிக்கப்பட்டது. அப் பணக் கொண்டு அமைக்கப்பட்ட உருவச்சிலை இன்றும் நின்று, சாமர்க்கியமும், உழைப்பும், நேர்மையும், பொதுஜன ஊழியத்தில் விழைவும் எப்படி ஒருவரை மிகத் தாழ்த்த நிலையிலிருந்து மிக வுயர்ந்த நிலைக்குக் கொண்டு சேர்க்கும். என்று காட்டி வருகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/96&oldid=610011" இலிருந்து மீள்விக்கப்பட்டது