பக்கம்:பெரிய இடத்துச் செய்தி.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. போல மண்ணில் மறைந்து கிடக்கும் மாணிக்கத்தைப் போல முள் கிறைந்த காட்டுப் புதரில் பூக்க முல்லையைப் போல அச்சிற்றுாரின் இடையில் அழகிய மாளிகை,பணச் செருக்கால் என் முன்னேர்கள் அதைக் கட்டினர்களே ஒழிய வேறில்கல அது நகரத்திற்கு மிக மிகத் தொலைவில் இருந்ததால் கண்டு களிக்கவோ-அல்லது வந்து தங்கி உண்டு களிக்கவோ யாரும் அங்கு வருவதில்லை. தோப்புக் கிடையில் சிந்து வாரற்றுக் கிடந்தது அந்தச் சிங்கார மாளிகை. அதைச் சுற்றிலும் குடியானவர்கள் குடிசை: குடியானவர்களோ, நாகரிகம் என்பதே அறியாதவர்கள் உயர்ந்து பருத்த உருவங்கள். பரட்டைத் தலேயர்கள், கண்டதை உண்டு கடுங்குளிர் மழையிலே திரியும் ஆடை உடுத்தத் தெரியாத அரை கிர்வாணிகள். உடல் காறத் தலை காற உரையாடுகின்ற வாய் காற வாழ்கின்ற மனித யிருகங்கள். அவர்களேத் திருத்த முடியாது. திருத்த கினைப்பது கடலேத் திடலாக்க கினேப்பதைப் போன்றது தான். ஊம்...... ...! ஊம்.....பிறகு - பிறகு அவர்களே யெல்லாம் கூட்டிச் சீர்திருத்தக் கதைகள், சிரிப்பூட்டும் சிக் துகள், இயற்கையைப் பற்றிய இன்னிசைப் பாட்டுக்கள் கட்டுரைகள் காவல்கள் யாவும் படித்துக் காட்டுவேன். வேறு பொழுது போக்க வழி யில்லை யல்லவா-வாயைப் பிளந்து வானத்தைப் பார்த்துக் கொண்டே கேட்பார்கள். ஆனல் திருந்த மாட்டார்கள். பாலைவனத்தில் பாதிரியார் சொற்பொழிவுப் பணி புரிக் ததைப் போல என் முயற்சிகளெல்லாம் பயனற்றுப் போயின. எங்கள் கிலத்தைப் பயிரிடுகின்றவன் மகன். வயது இருபத்திரண்டு இருக்கும். சிறிது அழகும் உடை யவன். பாதிரியாக வேண்டுமென்று கிருத்துவக் கல்லூரி