பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 பெரிய இடத்துப் பெண் உலகநாதரிடம் ஊடல் உண்டு! கூடல் உண்டு! பாடல் உண்டு! ஆனால் அப்போதும் கண்ணம்மாவுக்கு வீரனைக் காணவில்லையே என்ற வாடல் உண்டு! உலகநாதரிடம் உல்லாசம் பரிமாறுவதுண்டு! சல் லாபம் உண்டு ! எல்லாமுண்டு! ஆனால், வீரனிடம் நடிப் பதற்கு இவை ஒத்திகைகள். வண்டிக்கார வீரன் பலே ஆள்; கட்டுமஸ்தான உடல்; உழைத்து உழைத்துப் பக்குவம் பெற்ற உடற் கட்டு. முகத்திலே எப்பொழுதும் ஓர் அலாதியான தேஜஸ்! 'ஹை' என்று அவன் மாடுகளை அதட்டுவதே ஒரு சங்கீதமா யிருக்கும். அலட்சியமாகப் பார்வையைச் சிந்தும்போது அவன் ஒரு பாட்டாளி என்பதையே மறந்துவிடுவான். அவனது சிரிப்பிலே ஒரு தனி அழகு தாண்டவமாடும். அரும்பிய சிறு மீசைகள் ! அவசரத் தையே காட்டிக்கொண் டிருக்கும் அசைவுகள்! கண்ணம்மாவின் கருத்தைக் கிளற இவை போதாதா? கண்ணம்மா கற்போடு நடக்க வேண்டு மென்றுதான் முதலில் கருதினாள். ஆனால், உலகநாத ரின் விகார ரூபம் அவள் பிடிவாதத்தை உடைத் தெறிந்தது. வீரனின் 'கணீ'ரென்ற அதட்டல் காளை மாடுகளை அதிரச் செய்தன. அதே சமயத்தில் அந்த ஒலி கண்ணம்மாவுக்குக் கீதமாக இருந்தது. வண்டிக் காரனின் முறைப்பு, வெறித்த வண்டி மாடுகளுக்கு வெதறலைத் தந்தது. அதே சமயத்தில் கண்ணம்மாவுக்கு அது கம்பீரப் பார்வையாக இருந்தது. அவனது சவுக் கடிகள் மாடுகளுக்கு மனவேதனையைக் கொடுத்தன. அந்தச் சப்தத்தில் அவனது ஆற்றல் ஒளிந்து கிடப்ப