பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு.கருணாநிதி 19 நிலை இப்படி ஆகி இருக்குமா? நான் சிறுமியா யிருக்கும் போது, எவ்வளவோ நல்லவளாகத்தான் இருந்தேன். ஊரில் கண்ணம்மா என்றாலே தனிப் பிரியந்தான் காட்டினார்கள். எனக்குக் கடவுளிடத்தில் அபார பக்தி இருந்தது. கிழமை தவறினாலும் தவறும், என்னுடைய விரதங்கள் தவறு. அம்பிகைக்குப் படையல் செய்து விட்டுத்தான் சாப்பிடுவேன். எதிர்காலத்தில் ஒரு பெரிய 'பக்திமானி'யாக வேண்டுமென்ற பேராசையால் என் நெஞ்சம் நிரப்பப்பட் டிருந்தது. சதா சர்வ காலமும் தெய்வத்தின் திரு நாமங்களையே உச்சரித்துக்கொண் டிருப்பேன். இப்பொழுதுதான் என்ன? எப்பொழுதும் ஆண்டவனைத் துதித்த வண்ணமேதான் இருக்கிறேன். குற்றம் செய்தவர்கள்தானே மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும்! நான் செய்த விஷமகரமான விபரீதச் செயல்களுக்குக் கடவுளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளத்தானே வேண்டும்! ஆனால் ஒன்று. அதை யாரும் கவனியாது விட்டு விடாதீர்கள்! பகவா னிடம் மன்னிப்புப் பெற்றுவிடலாமென்ற தைரியத்தில் நான் இன்னும் என்னுடலில் ஊறிப்போன செய்கை களை விட்டு விடாமல்தான் இருக்கிறேன்; அதை ஏன் கேட்கிறீர்கள்! விபசாரி வேதாந்தம் பேசுகிறாள் என்று கூறுவீர்கள், விவேகமொழி கூறுகிறாள் என்று ஏள னம் செய்வீர்கள். என்னைப்பற்றி நீங்கள் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டுமா? இதோ பதில்! கண் ணம்மா ஒரு விபசாரி! கண்ணம்மா ஒரு பக்த சிரோன் மணி! போதுமா?இன்னும் வேண்டுமானாலும் இதோ விளக்கம். கேளுங்கள்! என் தகப்பனார் நல்ல செல்வந்தர். என் தாயார் என்னை வெகு வெகு அருமையாக வளர்த்தாள். நானும்