பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 பெரிய இடத்துப் பெண் நன்றாகத்தான் வளர்ந்தேன். எப்படியோ எனக்குத் தெரியாது; ஒருநாள் உலகநாதரின் திருஷ்டியில் பட்டு விட்டேன். 'ஆண்கள் இருக்கும் பக்கத்தில் போகக் கூடாது' என்று என் அன்னை அடிக்கடி கூறித்தான் வந்தாள். ஆனால் கால வித்தியாசம், அவரது கழுகுப் பார்வைக்கு இரையானேன். இடுக்கி; கால்களின் இடும் புப் பிடியில் எலிகளைத் தூக்கிச் செல்லும் கழுகைப் போலவே, உலகநாதர் என்னை அடைந்துவிட்டார்.அந்த வயிற்றெரிச்சலை வர்ணிப்பானேன்! உலகநாதருக்கும் எனக்கும் திருமணம் நடந்தது. ஆமாம், வாழ்க்கையை ஒப்பந்தம் செய்து வைக்கப்பட்டேன். அதன் பெயர் திருமணமா? கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டுக் கரடி யோடு கொஞ்சு என்று கட்டளை இடுவதற்குப் பெயர் தான் 'திருமண' மென்றால், எனக்கு நடந்ததும் திரு மணம்தான்.விஷத்தை வேலில் தடவி விழியில் சொருகு வதற்குப் பெயர்தான் 'வாழ்க்கை ஒப்பந்தம்' என்றால் எனக்கு நடந்ததும் வாழ்க்கை ஒய்பந்தந்தான்! உலக நாதர் எனக்குக் காண்டாமிருகமாகத் தோன்றினாரே யொழியக் கணவனாகக் காட்சியளிக்கவில்லை. உலகத் தின் விகாரமே உருப்பெற் றெழுந்ததுதான் உலக நாதர். நான் என்ன செய்வேன்; அவருக்கு என்னவோ இளமை இருந்தது உண்மை. ஆனால், என் இதயத் தைக் கவரும் இன்முகம் கிடையாதே! அவர் வாலிப் முறுக்குள்ளவர்தான். ஆனால், அந்த வடிவம் வராகத் தைப் பழிப்பது போலவா இருக்க வேண்டும்? இவை கள் நான் பொறுத்துக்கொள்ளக் கூடாதா என்று நீங்கள் கேட்பீர்கள். 'புல்லென்றாலும் புருஷன், கல் லென்றாலும் கணவன்' என்று புராணக் காலக்ஷேபங் .