பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. கருணாநிதி 25 யில்லை. என் உடம்பில் ஏதாவது கூச்சம் இருந்தால் தானே! என் மனசுதான் மறத்துப் போய்விட்டதே! குழந்தையை அழித்த சில நாட்களுக்குப் பிறகு வீரனுக்கும் எனக்கும் நடுவே ஒரு தொய்வு ஏற்பட்டது. திடீரென்று வீரன் என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டான். என்னைக் கண்டாலே பிடிக்காதவன் போல் நடந்துகொண்டான். நான் ஏதாவது கேட்டால் 'வெடுக்'கென்று பதிலைச் சொல்லிவிட்டு நகர்ந்துவிடு வான். எத்தனையோ முறை உலகநாதர் வெளியூர் சென்று வந்தார். நான் அந்த நேரங்களை யெல்லாம் தனியாகவே கழித்து வந்தேன். பலமுறை வீரனுக்கு ஆள் அனுப்பிப் பார்த்தேன். அவசரச் செய்தி என்று கூப்பிட்டேன். ஒன்றுக்கும் அவன் அசையவில்லை. காரணந் தெரியாது விழித்தேன். என்னுடைய கலக்கத்தைக் கண்டு என் கணவர், "என்ன கண்ணம்மா வருத்தம்?" என்று கேட்பார். "ஒன்றுமில்லை; உடம்பு சரியில்லை" என்பேன். உடனே அவர் எனக்குச் சிகிச்சைகள் செய்ய ஆரம்பிப்பார். அவர் அறிந்துகொள்ள முடியாத நோய் எனக்கு! அதை நீக்க அவர் கொண்டுவந்து தரமுடியாத மருந்து ஒன்று இருந்தது. அதை அவர் எப்படி அறிவார், பாவம்! இந்த நிலையிலே ஒரு சில மாதங்கள் ஓடின. என்னுடன் பட்சமாயிருந்த உலகநாதரும் திடீ ரென்று மாறிவிட்டார். எப்பொழுதும் சிந்தனை; எப் பொழுதும் வெறுப்பு; எப்பொழுதும் கடுகடுப்பு! சாதாரண வேளையிலேயே என் நாயகரைப் பார்க்க ஆயிரங் கண்கள் வேண்டும். அதுவும் இந்த நிலைமையி