பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பெரிய இடத்துப் பெண் ஆசை வரையில் கூறிவிட்டேன். குமுதா ஒன்றும் பேச வில்லை. பேசாமற் போய்ப் படுத்துக் கொண்டாள். சற்று நேரத்திற்குப் பிறகு குமுதா விம்மி விம்மி அழுத சப்தம் மட்டும் எனக்குக் கேட்டது. அன்றிரவு அதோடு முடிந்தது. மறுநாள் காலை கொல்லைப்புறத் தோட்டத்தில் குமுதா தன் தகப்பனுடன் பேசிக்கொண் டிருந்தாள். குட்டி தப்பித்துக் கொள்வாளோ என்ற பயம் எனக்கு. "குமுதா! குமுதா!" என்று அதட்டலாகக் கூப்பிட் டேன். ஓடிவந்துவிட்டாள். எனக்குத் தெரியாமல் அவள் கண்களைத் துடைத்துக் கொண்டதை நான் பார்க்காமலில்லை. வீரனை நான் மறுபடியும் அடையும் பொருட்டு நான் குமுதாவை என்ன செய்தால்தான் என்ன? என்னை வந்தடையும் பழி பாவங்களுக்கு நானா பொறுப்பாளி? 'எண்ணியபடி எதுவும் நடக்காது' என்ற சட்டமும், 'அவனன்றி ஓர் அணுவும் அசையாது' என்ற உறுதியும் இருக்கிற உலகத்திலே நான் ஒரு குற்றமற்றவள் தானே! இந்தத் தைரியத்தில்தான் குமுதாவின் நல்வாழ்வில் நஞ்சைக் கலந்தேன். அந்தக் காரியத்தைச் செய்யும்பொழுது என் உடல் பதறவில்லை தான். தோட்டத்தில் உத்தண்டியைச் சந்தித்து குமுதா பேசிய அன்றிரவேதான் நான் அந்தச் சதியைச் செய்தேன். உங்கள் பாஷைப்படி அது 'சதி'யாக இருக்கலாம். ஆனால், அந்தக் காரியம்தான் என் தலை விதியைத் தலைகீழாக மாற்றிய மாபெரும் புரட்சி ! என் சுயநலத்துக்காகக் குமுதாவைக் கொலை செய்தால்தான் என்ன? .