பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. கருணாநிதி 31 குமுதா வேண்டுமானால் என்னைக் கொலை செய்திருக்கலாம். சந்தோஷத்தோடு செத்திருப்பேன். ஆறிலும் சாவு தான், நூறிலும் சாவுதான். ஆனால், எனக்கு வாழ்க்கை யிலே ஆசை ஏற்பட்ட பிறகு சாகத் துணிவது சாமான் யமாகத் தோன்றாமல்தான் இருந்தது. கண்ணம்மா செய்த வேலை என்னை ஒரு வீராங்கனையாக்கிவிட்டது. சாவோடு விளையாடத் தயாராகி விட்டேன். "ஏன் இந்த முடிவுக்கு வந்தாள் குமுதா?" என்று நீங்கள் சந்தேகப் படுவீர்கள். முதலில் என்னைப் பற்றிய குறிப்பைப் படியுங்கள். நான் உத்தண்டியின் மகள். குழந்தையா யிருக்கும் பொழுதே தாயார் இறந்துவிட்டாள். என் குலத்திலே இல்லாத வழக்கமாக எனக்கு ஐந்தாவது வகுப்பு வரை யில் கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டது. அந்த ஆரம்பப் படிப்பை வைத்துக்கொண்டுதான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். ஆனால் எனக்கு ஒரு வருத்தம். இந்தக் கடிதத்தை என் அத்தான் படிக்காவிட்டாலும் யார் கையிலாவது அகப்பட்டு நான் குற்றமற்ற நிரபராதி என்பது ருசுவாகி விட்டால் போதும். உலகத்திலே ஒருவராவது 'குமுதா குற்றமில்லாத பெண்' என்று கூறமாட்டார்களா? நான் படித்த பெண்தான். படித்திருந்தாலும் படிந்த மனப்பான்மை உள்ளவள். நாகரிகத்தின் நாசுக் வேலைகளால் உள்ளத்தைக் குரங்கைப்போல ஆக்கிக் கொண்ட பெண்களின் இனத்தைச் சேர்ந்தவள் நானல்ல என்பதை நீங்கள் கட்டாயம் நம்பவேண்டும்.