பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. கருணாநிதி 33 என் இருதயப் பீடத்திலே அத்தானை அமரவைத்துப் பூஜித்துக்கொண் டிருந்தேன். அந்த இடத்திலே யாரும் எட்டிப் பார்க்கவும் முடியாது. அப்படி இருந்த அதே குமுதாதான் வெட்க மில்லாமல் இந்தக் கடி தத்தை எழுதுகிறாள். நான் கடிதமா எழுதுகிறேன். இல்லை கதறுகிறேன்! கடிதமா இது! இல்லை, கண் ணீர்த் தேக்கம்! எழுத்துக்களா இவைகள்! இல்லை, இதயத்தைப் பொத்துக்கொண்டு. பீறிட்டுக் கிளம்பிய இரத்தத் துளிகள்! ல அன்றிரவு........அய்யோ........ அதை நினைத்தாலே குலை நடுங்குகிறதே! என் தகப்பன் ஆசையைக் கெடுக் காமல் உலகநாதர் வீட்டுக்கு வேலைக்காரியாகச் சென் றேன். கண்ணம்மா என்னை அவருக்கு வெள்ளாட்டி யாக்க முயன்றாள். ஒருநாள் இரவு அந்தப் பேச்சை எடுத்தாள். புருஷனுக்குப் பெண் தேடும் அவசியம் அவளுக்கு ஏன் ஏற்பட்டதோ எனக்குத் தெரியாது. என்னென்னவோ தளுக்குமொழிகள் பேசினாள். நாசுக் காக என்னை நடத்தினாள். வெட்டப்போகிற கிடாவுக்கு மஞ்சள் தெளித்து மாலை போடுகிறாள் என்பதை நான் முதலில் புரிந்துகொள்ளவில்லை. விஷயத்தை உணர்ந்து விம்மினேன். வீரனிடம் அதைச் சொல்லித் தப்பித்துக் கொள்ள திட்டம் போட்டேன். வீரனைக் காணவே இல்லை. அப்பா வந்தார். அவரிடம் விஷயத்தை முழு வதும் சொல்ல முடியவில்லை. அதற்குள் எஜமானி கூப்பிட்டுவிட்டாள்; காரியம் மிஞ்சி கண்ணம்மா விட்டது. அன்றிரவு மணி பத்து இருக்கும். உலகநாதர் ஊரில் இல்லை என்று கண்ணம்மாள் சொன்னாள். 3