பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. கருணாநிதி 35 னுடைய கடைவாய்ப் பற்களின் கூர்மை என்னைப் பிளந்தெறிந்தது. நான் இப்பொழுது ஒரு வேசி! விப சாரி! குமுதாவின் உடலை ஒருவன் ருசிபார்த்து விட் டான். என் உள்ளத்தை அந்த உன்மத்தன் அடிமைப் படுத்தவில்லை; அதற்காக நான் பரிசுத்த மனுஷி என்று பறை சாற்றிக்கொள்ள முடியுமா? இராமாயணத்திலே சீதை, "ராமப்ரபூ! இராவ ணன் என் உடலைத் தீண்டினானே தவிர உள்ளத்தைத் தீண்டவில்லை" என்று கூறி தப்பித்துக் கொண்டா ளாம். அதுபோல நான் வீரனிடம் நல்ல பெயர் வாங்க நினைக்கவில்லை. இன்னொருவன் தொட்ட குமுதாவைக் கபடமற்ற வீரன் தொடுவதா? அன்னியனுடைய எச் சிலை அத்தானுக்கு வழங்குவதா? பக்கத்திலே இருந் தான்; பார்த்தேன். வெற்றிச்சிரிப்பு சிரித்தான்; நான் வெகுளவில்லை. அணைத்தான்; அடங்கி விட்டேன். பலாத்காரச் செயல்தான்! தடுக்கும் தைரியம் எனக்கு வரவே இல்லை. "ஏண்டி குமுதா! உன்னை மீறியா ஒன்று நடந்துவிடும்?" என்று கேட்பீர்கள்; உண்மைதான். ஆனால், நடந்துவிட்டதே, என்ன செய்வேன்? க புளிப்புக் கலந்த பாலாகி விட்டேன்; விஷங்கலந்த உணவாகி விட்டேன். ஆனால் நான் விபசாரியாக வாழ நினைக்க வில்லையே! அதற்காக நீங்கள் இரங்கலாகாதா? என்னை மன்னிக்கக் கூடாதா? என் கடிதத்தை மறு முறையும் படித்துப் பாருங்கள். கண்ணம்மா என்னை வஞ்சித்தாள்! 'பெரிய இடத்துப் பெண்மணி' இந்த வேலை செய்தாள்; செல்வர் வீட்டுச் சீமாட்டி சதி புரிந்தாள், தன் கணவனைத் தாசி வீட்டுக்குத் தூக்கிச்