பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. கருணாநிதி 43 பொறுப்பாரா? தெய்வமே சகிக்காத தவறை யல்லவா அவள் செய்தாள்! அதற்குத் தெய்வம் தந்த தண்டனை சரியான தண்டனை. குமுதாவுக்குக் காலரா கண்டுவிட் டது. வாந்தி பேதிக்கு இலக்கானாள். அந்த வஞ்சகி! கருப்பு மனம் படைத்த அந்தத் தாசியின் ஆபாச வாழ்க்கை அழிந்தது, என் சாபம் என்ன சாமான்ய மானதா? ஏமாந்து போனவன் கொடுத்த சாபமல்லவா? கைவிடப்பட்ட வீரனின் கோபாக்கினிக்கு அந்தக் கொலைகாரி இரையாக வேண்டியதுதானே நியாயம்! அவள் சாகும்போது நான் அருகில்தான் இருந்தேன். என்னை இரண்டு மூன்று முறை பார்த்தாள். நான் அந்த இராக்ஷசியின் முகத்தில் விழிப்பதே பாபம் என்று கருதி அந்த இடத்தை விட்டுப் போய் விட்டேன். பொழுது போவதற்குள் குமுதா போய்விட்டாள். . என்னைக் கல்யாணம் செய்துகொண்டு ஊர்வலம் போகப் போகிறதாகச்சொல்லி, அதிலே தனக்கு ஆசை யிருப்பதாக நடித்த அந்த நாசக்காரி பாடையில் பவனி போனாள். அதைப் பார்த்து நான் மகிழ்ந்தேன். உத்தண்டி மாமா கதறினார். தெருவில் புரண்டார். பாவம், பெற்ற தோஷம்; புலம்பினார். அந்த விபசா ரியை இவர் ஏன் பெற்றார்? குமுதா இறந்துபோன அன்றிரவே நானும் கண் ணம்மாவும் ஒரு திட்டம் தயாரித்தோம். அதை அமு லுக்குக் கொண்டுவர அதுவே ஏற்ற நாளாயிற்று. அந்தத் திட்டந்தான் என்னை இவ்வளவு பெரிய அதிர்ஷ் டக்காரனாக ஆக்கிவிட்டது. இப்பொழுது என்னைப் பாருங்கள்! நான் வண்டிக்கார வீரனா?