பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பெரிய இடத்துப் பெண் கண்ணம்மாவின் விரல் பட்ட மாத்திரத்தில் காந்தத் தோடு தொடரும் இரும்புபோலக் கழுத்தைத் திருப்பும் உலகநாதர் அன்று முரட்டுத்தனமாக, முகத்தை அசைக்காமலேயே இருந்துவிட்டார். கடைசி வரையில் பார்த்துவிடுவதென்ற முடிவில் கண்ணம்மா ஊஞ்சலை விட்டுக் கீழே இறங்கினாள். உலகநாதரின் உந்தலினால் ஆடிக்கொண் டிருந்த ஊஞ்சல் கண்ணம்மாளைக் கீழே தள்ளிற்று. கண்ணம்மாள் கீழே விழுந்தாள். அடி அவ்வளவாக இல்லை. ஆனாலும் எவரெஸ்ட் சிகரத்தி லிருந்து வழுக்கி விழுந்தவள்போல வேதனையைக் கொட்டினாள். உலகநாதருக்குக் கருணை பிறந்தது."கண்ணம்மா! கண்ணம்மா!" என்று கூவிக்கொண்டே அவளைத் தூக்கினார். மீண்டும் ஊஞ்சல் ஆட ஆரம்பித்தது. உலகநாதரும் கண்ணம்மாவும் இப்புரிப் பிர யாணத்தை ஆரம்பித்தனர். உலகநாதர், ஆமாம்! 'மண் டிக்கடை மன்னர்' என்றுகூடப் பட்டஞ் சூட்டுவார்கள் மாநாடு கூட்டினால். அவ்வளவு பெருத்த வியாபாரி. கண்ணம்மா- அவள் குடும்பமும் அவருக்குச் சளைத்த தல்ல? செல்வமும் செல்வமும் கைகோர்த்துக்கொண் டன. பணமும் பணமும் உராய்ந்துகொண்டன.நான்கு வருடங்கள்! உலகநாதர்-கண்ணம்மா திருமணமாகிக் கழிந்த ஆண்டுகள் அவை. உலகநாதர் சற்று தடித்த தோலர்! ரோஷமில்லாக் காரணத்தாலல்ல; உடற்கூறுதான் அப்படி! கண் ணம்மா ரோஜா மலர்! அவளை இவருக்குக் கட் டினார்கள்