5. காப்பிய காலம்வரை சிவன் சங்கப் பாடல்களின் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் கூறும் செய்திகள் சங்கப் பாடல்களில் ஆலமர் செல்வனாகிய சிவபிரான் பெற்றுள்ள இடத்தையும் அப் பழந்தமிழர் கோயில் கட்டிய முறை, வழிபாட்டு முறை என்பவை பற்றியும் சென்ற அதிகாரத் தில் கண்டோம். இனி அச் சங்கப் பாடல்கள் தொகுக்கப்பெற்ற பின் பெருந்தேவனார் முதல் பெயர் அறியப்படாத பல புலவர் களால் பாடப் பெற்ற கடவுள் வாழ்த்துக்களைச் சற்றுக் காண்டல் வேண்டும். சங்க இலக்கியப் பாடல்கள் தோன்றிய காலத்தில் காணப்படாத அல்லது அப் புலவர்கள் பாடாத சில பல கருத்துக் கள் இக் கடவுள் வாழ்த்துக்களில் இடம் பெறுகின்றன. சிவபிரானைப் பற்றியுள்ள பாடல்களில் காணும் செய்தி களைத் தொகுத்துக் காணலாம். 1) கொன்றைத் தார்' கொன்றை மாலை கொன்றைக் கண்ணி 2) துதலது இமையா நாட்டம் , 3) கையது கணிச்சி", மழுவே", மூவாய்வேல்' 4) ஊர்ந்தது ஏறே" 5) சேர்ந்தோள் உமையே 6) செவ்வான் அன்ன மேனி '" 7) எரி அன்ன சடை' 8) திங்கள் சூடினவன் 9) வயமானுரிவை உடையன்' 10) மணிமிடறு ' 2 9. I ?
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/102
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை