பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 பெரியபுராணம்- ஓர் ஆய்வு 13) காலக் கடவுள்-பதிற்றுப்பத்து மட்டும் கூறும் 14) 'மூவா அமரரும், முனிவரும், பிறரும் 臀 யாவரும் அறியாத் தொன்முறை மரபின் என்று அகம் மட்டுமே பேசுகிறது. இவற்றிலிருந்து ஒருசில கருத்துக்களை அறிய முடிகிறது. இறைவன் முக்கண்ணன், உமையொருபாகன், மழு கணிச்சி சூலப்படை உடையவன், நெருப்புப் போன்ற நிறமுடையான், விடை ஏறுபவன், சடை உடையவன், நீல கண்டம் உடையவன், புலித்தோலாடை அணிபவன், உடுக்கை வாசிப்பவன், கால காலன் ஆயவன் என்ற செய்திகளே அவை. இவற்றுள் மழு, சூலம் உடையவன், நெருப்பு அன்ன நிறமுடையவன், சடை உடையவன், நீல கண்டம் உடையவன், முக்கண்ணன் என்ற செய்திகள் வேத காலத்திலும் அதனை அடுத்த காலத்திலும் காணப்பெறும் செய்திகளாகும். இவற்றையல்லாத உமையொரு பாகன், விடை ஏறுபவன், உடுக்கை வாசிப்பவன், காலகாலன் என்பவை வேத காலத்தில் காணப்படாத செய்திகளாம். அமரர் முதலியோரால் அறியப் படாதவன் என்று அகநானூறு கூறும் செய்தியும் அவ்வாறே. கலித்தொகைப் பாடல்கள் கூறும் புதிய செய்திகள் இவற்றையல்லாமல் இறைவன் திரிபுரம் எரித்த செய்தி புறப்பாடலிலும் (55), கலித்தொகைப் பாடலிலும் (2) இடம் பெற, பல்வேறு நடனங்கள் ஆடுகின்ற செய்தி கலித்தொகையில் மட்டுமே இடம்பெறுகின்றது. 'ஆறறியந்தணர்க்கு அருமறை பலபகர்ந்து தேறுநீர் சடைக்கரந்து திரிபுரம் தீமடுத்து கூறாமல் குறித்ததன் மேற்செல்லும் கடுங்கூளி மாறாப் போர் மணி மிடற்று எண்கையாய் ' என்று கடவுள் வாழ்த்துப் பகுதி கூறும். பாலை பாடிய பெருங்கடுங் கோவும் பாலைக் கலி முதற் பாடலில், 'மடங்கல்போல் சினை.இ மாயஞ் செய் அவுணரை கடந்தடு முன்பொடு முக்கண்ணான் மூவெயிலும் உடன்றக்கால் முகம் போல ஒண்கதிர் தெறுதலின் சீறருங் கனிச் சியோன் சினவலின் அவ்வெயில் ஏறுபெற்ற உதிர்வன போல் “.......... என்று இறைவன் திரிபுரம் எரித்ததைப் பற்றிப் பேசுகிறான்.