பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய காலம்வரை சிவன் 7 7 சங்கப் பாடல்களுள் மிகுதியும் பாடினவர் எனப் புகழப்படும் கபிலர், குறிஞ்சிக்கலி 2ஆம் பாடலில், 'இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன் உமையமர்ந்து உயர்மலை இருந்தனன் ஆக ஐயிருதலையின் அரக்கர் கோமான் தொடிப்பொலி தடக்கையின் கீழ்புகுந்து அம்மலை எடுக்கல் செல்லாது உழப்பவன் போல........ 17 என்று இராவணன் கயிலை மலையைத் தூக்கமுயன்றதை விரிவாகவே பாடுகிறார். கலித்தொகையில் வரும் இக் குறிப்புக்கள் புராணக் காலத் தில் எழுந்த கதைகளைத் தம்முள் கொண்டு விளங்குகின்றன. இவை தவிரப் பதிற்றுப்பத்துக் கடவுள் வாழ்த்து 'பொன்னார் எயில் எரியூட்டிய வில்லன்' என்று பேசுகிறது. 'ஒரு கணை கொண்டு மூவெயில் உடற்றிப் பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த என்று புறப்பாடலும் (55), கூறுகிறது. வேத காலத்தில் திரிபுரம் எரித்த கதை இல்லை. புராண காலத்தில் இடம்பெற்ற கதையாகும் இது. - சங்ககாலப் பாடல்களுன் மிகப் பழைய பாடல்களிலிருந்து கடவுள் வாழ்த்து என்ற பெயரில் வழங்கும் பாடல்கள் வரை சிவபிரானைப் பற்றிய குறிப்புக்களைக் கண்டபிறகு சில ஐயங்கள் மனத்தில் தோன்றுகின்றன. சங்கப் பாடல்கள் தோன்றிய காலத்தை கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி. ஒன்றாம் நூற்றாண்டுவரை நீட்டலாம், என அறிஞர் கருதுகின்றனர். சங்கப் பாடல்களுள் இரண்டாஞ் சங்கப்பாடல் என்று கருதப்இபறும் முரஞ்சியூர் முடிநாகராயர் பாடிய பாடலும் புறநானூற்றில்' இட்ம் பெற்றுள்ளது. எனவே கி.மு. இரண்டாம் நூற்றாண்டு என்று மேல் எல்லை வகுப்பதும் சரியோ என்ற ஐயம் தோன்றுகிறது. அப்படியானால் இன்னும் ஒரு நூற்றாண்டு மேலே செல்வதில் தவறு இல்லை. இந்நிலையில் ஆசிரியர் தொல்காப்பியனாரின் காலத்தைக் கணித்தல் தேவைப் படுகிறது. இந்திரன், வருணன், என்பவர்கட்கு ஏற்றம் தந்து அவர் பாடுதலின் இவர்கள் மதிப்புடன் போற்றப்பெற்ற வேத காலத்தை அடுத்து இவர் வாழ்ந்திருக்கலாமோ என்றும் நினைக்க இடம் உண்டாகிறது. அவர் வகுத்த இலக்கண வரம்புக்குக் கட்டுப்படாமல் சங்கப் பாடல்கள் பல உள்ளன. 'நாடக வழக்கிலும் உலகியல் வழக்கிலும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்