காப்பிய காலம்வரை சிவன் 7 9 இல்லை. எங்கோ ஒருவர் இருவர் புலவர்கள் தனிப்பட்ட அரசன் ஒருவன் செய்த யாகத்தைப் புகழ்ந்து கூறியுள்ளனரேயன்றி யாகம் என்பது மனிதனுடைய வாழ்வில் இன்றியமையாத இடம் பெற வேண்டிய ஒன்று என்று இத் தமிழருள் யாரும் கருதினதாகவோ, கூறினதாகவோ தெரியவில்லை. சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்பானைப் பற்றி மூன்று பாடல்கள் புறநானூற்றில் உன்ளன. அவை பாண்டரங்கனார்' என்பவராலும் அவ்வையாராலும்' உலோச் சனார் என்பவராலும் ' பாடப்பட்டுள்ளன. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த மூன்று பாடல்களிலும் இவன் இராசசூய யாகம் செய்ததாகக் கூறப்படவில்லை. இராசதுயம் என்று இல்லாவிடினும் சாதாரண யாகம் செய்தான் என்ற செய்திகூட இல்லை. அப்படியானால் கொளுவில் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்று எழுதப்பெற்றது எந்த ஆதாரத்தைக் கொண்டு? இத்துணைப் பெரிய வேள்வியை அவன் செய்திருப்பின் ஏன் ஒரு புலவரும் அதனைக் கூறவில்லை? அரசனை அரியணையில் அமர்த்தும் நிலையில் இராசதுய யாகம் செய்யப்படுவது என்று இதற்கு விளக்கம் தருகிறது அதர்வண வேதம். இதை ஏன் பெருநற்கிள்ளி செய்தான்? என்று அறியக்கூடவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சங்க நூல்களில் பேசப்படும் வேதம், யாகம் என்பவை யாவை என்பதை அறியமுடியவில்லை. வேதகால ருத்ர சிவனைச் சங்கப் பாடல்கள் குறிக்கவில்லை இது ஒருபுறம் இருக்க, சங்கப் பாடல்களின் கடவுள் வாழ்த்துப் பகுதியில் குறிக்கப்படும் தெய்வம் பற்றிய எந்தச் செய்தியையும் சங்கப்பாடல்கள் கூறாதது ஏன்? வேதம் ஒதும் அந்தணரும், முத்தீ வளர்த்தலும் எங்கும் உள்ளதாகக் கூறும் சங்கப் பாடல்களில் அந்த வேதத்திற் கூறப்பெற்ற தெய்வங்கள் (தமிழகத்தில்) பேசப்படாதது ஏன்? இந்திரன் முதலியவர்கள் வேண்டாதவர்களாக ஆகிவிட்டாலும் ருத்ரன் ஏன் பேசப் பெற வில்லை? சங்கப் பாடல் காலத்திற்கு முன்பே வேத வழக்கிலும் ருத்ரன் சிவனாக மாறி சதருத்ரீயத்தில் புகழப்படும் நிலை தோன்றிவிட்டதே ஸ்வேதாஸ்வதர உபநிடதம் சிவபரத்துவம் கூறியுள்ளதை ஏன் இத்தமிழர் போற்றவில்லை?
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/107
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை