காப்பிய காலம்வரை சிவன் 8 I அடுத்து, பெரும்பாணாற்றுப்படை, ‘............ நீடுகுலைக் காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்தாங்கு பாம்பனைப் பள்ளி அமர்ந்தோன்.............. • 25 என்று திருமால் திருவெஃகாவில் கிடந்த வண்ணத்தை அழகுற எடுத்துக் கூறுகிறதே! திருமுருகாற்றுப்படை முருகனைப் பற்றியும் அவன் செயல்கள் பற்றியும் மிக மிக விரிவாகப் பேசுகிறது. லிங்க புராணக் கதைகளைச் சங்கப் பாடல்கள் ஒதுக்கியது ஏன்? எல்லை இல்லாமல் புராணக் கதைகளை எடுத்துக்கொண்டு கற்பார் ஓரளவு பொறுமை இழக்கின்ற அளவுக்குத் திருமால் பற்றிய கதைகளையும் முருகன் பற்றிய கதைகளையும் பரிபாடல் பேசுகிறதே! புராணங்களில் உள்ள எந்தக் கதையையும் விடாமல் பரிபாடல் எடுத்து ஆளும்பொழுது லிங்க புராணத்தில் சிவபிரான் பற்றி வரும் கதைகளை எடுத்துக்கொண்டு பாடாதது ஏன்? சங்க காலத்தில் இக் கதைகள் இந்நாட்டவருக்குத் தெரியாது என்று கூறுவதும் பொருத்தமுடையது ஆகாது. ஸ்காந்தம், விஷ்ணு புராணம் என்பவை பரிபாடலில் இவ்வளவு பயன்படுத்தப்படும் பொழுது லிங்க புராணத்தையோ, சிவபுராணத்தையோ அவர் கள் அறியார் என்பது சரியன்று. இவ்வளவையும் நோக்கும் பொழுது ஒரு முடிவுக்கு வந்து தீரவேண்டிய இன்றியமையாமை ஏற்படுகிறது. சங்கப் பாடல்கள் எழுந்த காலத்தில் வேதத்தில் வரும் ருத்ரன் பற்றியும், சதருத்ரீயத்தில் வரும் சிவன் பற்றியும், லிங்க புராணத்தில் வரும் சிவபிரான் பற்றிய கதைகள் பற்றியும் இத் தமிழர் நன்கு அறிந்திருந்தனர். முருகன் பற்றிய கதைகளைப் பரிபாடல் கூறுகையில் அதே ஸ்காந்தத்தில் வரும் சிவபிரான் பற்றிய எல்லாக் கதைகளையும் அறிந்திருந்தும் பாடல்களில் அவற்றைப் பயன்படுத்தவில்லை என்றால் அதற்கு வலுவான காரணம் ஒன்று இருந்திருத்தல் வேண்டும். இப்பொழுது மறுபடியும் சிவபிரான் பற்றி வரும் பாடல்களை ஒரு கண்ணோட்டம் விட்டால் சில கருத்துக்கள் நினைவில் நிற்கும். கடவுள் என்ற சொல்லாலும், மழுவாள் நெடியோன்,
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/109
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை