காப்பிய காலம்வரை சிவன் 87 நினைப்பதில் தவறு இல்லை. யாவரும் நன்றாக அறிந்த ஒருவரைப் பெயர் சொல்லி அடையாளம் கூறவேண்டிய தேவை இல்லை. சென்ற 50 வருடங்களாக 'தேசப் பிதா', 'மகாத்மா” என்ற சொற்களால் ஒரு பெரியாரைக் குறித்து அனைவரும் பேசக் கேட்கிறோம். அவருடைய இயற்பெயர் யாது என்பது கூட இன்னும் சில நாட்களில் மறக்கப் பட்டாலும் வியப்படைய ஒன்றும் இல்லை. ஆனால் தேசப் பிதா என்று கூறினவுடன் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை உலகம் முழுவதும் அறிந்து கொள்கிறது. இந்த நிலைதான் சிவபிரானைப் பொறுத்தமட்டிலும் சங்கத் தமிழர் காலத்தில் இருந்து வந்தது என்று நினைய வேண்டி உளது. அதியமான் நெடுமானஞ்சி சாவா, மூவா நலந்தரும் நெல்லிக் கனியை அதன் பெருமையை முன்னர்க் கூறாமல் அவ்வைக்குத் தந்துவிட்டான். அப்பெருமாட்டியும் அதனை உண்டுவிட்டார். உண்ட பிறகே அக்கனியின் தனிச் சிறப்பு யாது என்பதை அவர் அறிய நேர்ந்தது. இத்தகைய ஒரு கனியைத் தானே உண்ண வேண்டும் என்று கருதாமல் வந்தவருக்கு அளித்த அதியனின் வள்ளன்மையை அவர் நினைத்து பார்க்கிறார். இத்தகைய செயலை இதற்கு முன்னர்ச் செய்த ஒருவனின் நினைவு வருகிறது அவருக்கு. அவ்வாறு செய்தவன் பெயரை அவர் வெளிப்படை யாகக் கூறவில்லை. ஏன்? அவன் செயலைக் கூறினால் உலக முழுவதும் அவன் யார் என்பதை உடனே விளங்கிக் கொள்ளும். அதனாலேயே அவன் பெயரைக் கூறாமல் அவ்வை பேசுகிறார். பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி நீலமணி மிடற்று ஒருவன் போல மன்னுக பெரும நீயே............ * 40 நீலமணி மிடற்று ஒருவன் என்று கூறியதால் பிறர்க்கு வாழ்வு தருவதற்காகத் தன்னலத்தைத் துறந்தவன் என்பது பெறப் படுகிறது. இப்பாடலில் சிவபிரான் பெயரை யாண்டும் குறிப்பிட வில்லை என்பது அறியத் தக்கது. சிலப்பதிகார காலத்தில் சிவன் நிலை, உமையின் வளர்ச்சி இனிச் சங்க காலத்தில் இருந்த வழக்கம் இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய சிலப்பதிகார காலத்திலும் தொடர்வதை விரிவாகக் காண முடிகிறது. சிலப்பதிகார ஆசிரியர்
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/115
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை